நான் போய் வருகிறேன் மாலேத் தீவே… பிரியா விடை கொடுத்த சோனாக்ஷி சின்ஹா

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது ஒரு வார விடுமுறையை மாலத்தீவில் மிகவும் உற்சாகமாக செலவழித்துள்ளார். விடுமுறை முடிந்து அவர் மாலத்தீவில் இருந்து விடைபெறும் நேரம் நெருங்கி விட்டதை சில புகைப்படங்கள் மூலம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

திரையுலக பிரபலங்கள் தங்களது இடைவிடாத படப்பிடிப்புகளுக்கு மத்தியில் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி படப்பிடிப்பு டென்ஷனை குறைப்பதற்காக எங்காவது வெளிநாடு சென்றுவிடுவதுண்டு. அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் ஒவ்வொரு படத்தின் சூட்டிங் முடிந்த உடனே ஐரோப்பிய நாடுகளுக்கோ, மாலத்தீவுகளுக்கோ பறந்து விடுவதுண்டு.

Good-Bye to Maldives always breaks my heart a little-Sonakshi Sinha Tweet

அதிலும், காத்ரீனா கைஃப், சுஷ்மிதா சென், தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்கா போன்ற முன்னணி நடிகைகள் என்றால், மாலத்தீவுகளுக்கு பறந்து விடுவார்கள். அங்கு பறந்து விரிந்த நீலவண்ண கடற்கரையில் பிகினி உடையில் தங்களை மறந்து சுற்றித் திரிவதுண்டு.

சமீபத்தில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது ஒரு வார விடுமுறையை மாலத்தீவில் மிகவும் ஆனந்தமாக களித்து வந்தார். ஒரு வாரம் முடிந்து அங்கிருந்து புறப்பட மனம் வராமல், என் குட்டி இதயத்தை நொறுக்கும் மாலத்தீவே போய் வருகிறேன் என்று ட்வீட் செய்து விட்டு, அவர் மாலத்தீவில் இருந்து விடைபெறும் நேரம் நெருங்கி விட்டதை சில புகைப்படங்கள் மூலம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் ஒரு தொகுப்பாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் சோனாக்ஷி சின்ஹா தங்கியிருந்த ஜுமேரா விட்டவேலி ரிசார்ட்டின் பரந்த காட்சியை பிரதிபலிக்கிறது. மற்றுமொரு புகைப்படத்தில் சோனாக்ஷி ரிசார்ட்டின் நடைபாதையில் நிற்பதை போல காட்சியளிக்கிறது.

மேலும் ஒரு புகைப்படம் மாலத்தீவின் சொர்க்கத்தை போன்ற இயற்கை காட்சியின் அழகை மிகவும் துல்லியமாக காட்டுகிறது.

சோனாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு முறையும் மாலத்தீவில் இருந்து விடைபெறும் போது இதயம் கொஞ்சம் உடைய தான் செய்யும்.

ஆனால் இந்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக பாதிக்கிறது. அதற்கு காரணம் ஜுமேரா விட்டவேலி ரிசார்ட்டின் அன்பும் அவர்களது அற்புதமான விருந்தோம்பலும் மிகவும் சிறப்பாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த விடுமுறை பயணம் ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதை சோனாக்ஷியின் எந்த ஒரு பதிவும் அதை தெளிவுபடுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X