»   »  தமிழ் சினிமா சரியில்ல-கோபிகா

தமிழ் சினிமா சரியில்ல-கோபிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கு திரையுலகில் சம்பளம்தான் ரொம்பத் தருகிறார்கள். ஆனால் நல்லபடங்களே இங்கு எடுக்கப்படுவதில்லை என்று கோபிகா தெலுங்கோடு சேர்த்துதமிழையும் வாரிவிட்டுள்ளார்.

கோபிகாவின் தமிழ் மார்க்கெட்டை க.கா.வுக்கு முன்பு (கனா கண்டேனுக்கு முன்பு),க.கா.வுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். கனா கண்டேன் வரை படு வேகமாகவந்து கொண்டிருந்த கோபிகா அப்படத்தில் கிளாமரில் குதிக்கப் போய் போய் சர்ரெனசறுக்கி விழுந்தார்.

குத்தாட்டம் ஆடுவீங்களா, குண்டக்க மண்டக்க காட்டுவீங்களா என ஆளாளுக்குக்கேட்டதால், அப்செட் ஆகிப் போன அவர் தமிழே வேண்டாம் என்று கூறி விட்டுமலையாளத்துக்குத் திரும்பினார். அங்கு கை நிறையப் படங்களில் நடித்து வந்தகோபிகா மறுபடியும் எம் மகன் மூலம் தமிழுக்குத் திரும்பினார்.

எம் மகன் நன்றாக ஓடியதால் அவரைத் தேடி தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் ஓடினர்.ஆனால் சேச்சியோ, இல்லல்லா, மலையாளத்துக்குத்தான் .தலிடம் அஎன்று கூறிதிருப்பி அனுப்பி விட்டார்.

தொடர்ந்து மலையாளத்துக்கே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார் கோபிகா.ஏன் இப்படி தமிழை துரத்துகிறீர்கள் என்று கோபியிடம் கேட்டால்,மலையாளத்தில்தான் நான் அறிமுகமானேன். தமிழில் எனக்கு ஆட்டோகிராப் மூலம்நடிக்க வாய்ப்பு வந்தது.

அதன் பிறகு தமிழில் ஐந்து படங்களில் நடித்து முடித்து விட்டேன். தெலுங்குப்படங்களிலும் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழ், தெலுங்கை விட மலையாளத்தில்தான்எனக்கு திருப்தி கிடைக்கிறது.

தமிழ், தெலுங்கில் சம்பளம்தான் நிறையக் கொடுக்கிறார்கள். ஆனால் நல்ல படங்கள்கிடைப்பதில்லை. எனக்கு நிறையப் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. கொறச்சுநடிச்சாலும், நல்ல ரோல்களாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

மலையாளத்தில் சம்பளம் குறைச்சலாக இருந்தாலும் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும்.அதனால்தான் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறேன் என்கிறார் கோபிகா.

பி.கு: திருச்சூரில் ஒரு டிராவல் ஏஜென்சியை ஆரம்பித்துள்ளாராம் கோபிகா. விமானடிக்கெட், ரயில் டிக்கெட் வாங்கித் தருகிறார்களாம் இந்த ஏஜென்சி மூலம். அதுதவிரபாஸ்போர்ட் வாங்கிக் தரும் வேலையையும் செய்து தருகிறார்களாம்.

அது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil