»   »  கிளாமருக்கு மாறும் கோபிகா!

கிளாமருக்கு மாறும் கோபிகா!

Subscribe to Oneindia Tamil

குடும்பக் குத்து விளக்கு அந்தஸ்திலிருந்து விலகி கிளாமர் கோதாவில் குதிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்குநூல் விட ஆரம்பித்துள்ளாராம் கோபிகா.

ஆட்டோகிராப் நாயகி கோபிகாவுக்கு தமிழில் அடுத்தடுத்து குடும்பப் பாங்கான ரோல்களே வந்து குவிந்தன.அவரும் படு சந்தோஷமாக நடித்து வந்தார். குடும்பப் பாங்கா கூப்பிடு கோபிகாவை என்ற ரேஞ்சுக்கு உயர்ந்துவந்த அவருக்கு கனா கண்டேனில் சறுக்கல் ஏற்பட்டது.

ஒரு பாட்டுக்காக கிளாமராக நடிக்கப் போக கதையைக் கட்டி விட்டு கடையை மூடி விட்டார்கள். கனா கண்டேன்சிறப்பாக ஓடியும், கோபிகாவின் நடிப்பு சிலாகிக்கப்பட்டும் கூட அவர் மீது கிளாமர் முத்திரை விழவே அப்செட்ஆகி மலாையளத்துக்குத் திரும்பினார்.

அங்கு அவருக்கு நிறையப் படங்கள் வரவே அப்படியே செட்டிலாகி விடலாம் என முடிவு செய்தார். ஆனால் எம்மகன் படத்தில் நல்ல கேரக்டர் வாய்ப்பு வர மீண்டும் தமிழுக்குத் திரும்பினார். அரண் படத்தில் அவருக்கு பெரியஅளவில் ஷைன் பண்ண வாய்ப்பில்லை.

தொடர்ந்து மலையாளத்திலேயே நடித்து வந்த கோபிகாவுக்கு இப்போது அங்கும் வாய்ப்புகள் குறையஆரம்பித்துள்ளதாம். இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளாராம் கோபிகா.

இந்த சமயத்தில்தான் சிலர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். கிளாமர் காட்டினால்தான் பொழைக்க முடியும்,துட்டு சேர்க்க முடியும் என்று அவர்கள் எடுத்துக் கூறவே, நீண்ட யோசனைக்குப் பின் கிளாமர் கோதாவில் குதிக்கமுடிவெடுத்துள்ளாராம் கோபிகா.

முழு அளவிலான கிளாமராக இல்லாமல், அளவான கிளாமர் காட்டத் தயாராக இருக்கிறேன் என்று இப்போதுகோலிவுட் தயாரிப்பாளர்களுக்கு கோபிகா தரப்பிலிருந்து ஓலை போயுள்ளதாம்.

தற்போது சுந்தர்.சியுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள யாழ்ப்பாணம் படத்திலேயே லேசு பாசாக கிளாமர்டிரையலை நடத்த முடிவு செய்துள்ள கோபிகா, எதிர்காலத்தில் நடிக்கும் படங்களிலும் கிளாமரை தூவி விடமுடிவு செய்துள்ளாராம்.

ஆசின், நயனதாரா என அத்தனை கேரள நாயகிகளும் கிளாமரைத்தான் முழு முதல் முலதனமாககொண்டுள்ளபோது தான் மட்டும் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதில் நியாயமில்லை என்பதை உணர்ந்தே இந்தமுடிவுக்கு வந்துள்ளாராம் கோபிகா.

இனிமேல் கோபிகாவையும் ரசிகர்கள் தித்திப்பாக ரசிக்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil