»   »  3 நாள் கோபிகா!

3 நாள் கோபிகா!

Subscribe to Oneindia Tamil

கோபிகாவுக்கு அரண் பெரிய பெயரைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அந்தஅளவுக்கு அவரது கேரக்டரை போட்டுத் தாக்கியுள்ளார்களாம்.

மலையாளம் மற்றும் தமிழில் தயாராகி வரும் அரண் படத்தில் மோகன்லால், ஜீவா,கோபிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதில் மற்ற எல்லோரையும் விட கோபிகாவின் கேரக்டர்தான் ரொம்பப்பேசப்படுமாம். அதாவது இதில் ஜீவாவின் ஜோடியாக வருகிறார் கோபிகா. அதாவதுமொத்தமே 3 நாள்தான் ஜீவாவுடன் வாழ்க்கை நடத்துகிறார் கோபிகா.

அதன் பின்னர் ஜீவா ராணுவத்திற்குப் போய் விடுகிறார். வாழ்க்கையைஆரம்பித்தவுடன் கணவன் ராணுவத்திற்குப் போய் விட அவனது இளம் மனைவிஎப்படித் துடித்து போவாரோ அதை அப்படியே தத்ரூபமாக நடிப்பில்கொடுத்துள்ளாராம் கோபிகா.

உணர்ச்சிப் போராட்டம், எண்ணப் போராட்டம் என கலவையாக கலக்கி எடுத்துள்ளகோபிகா, ஜீவாவுடன் நடிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு நடித்தாராம்.

இந்தப் படத்தில் கோபிகா வரும் காட்சிகளில் அவரது காஸ்ட்யூம்கள் பேசப்படுமாம்.இப்படத்திலும் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார் கோபிகா. அதென்னவோ இந்தசேச்சிக்கு தமிழ்ப் படங்களில்தான் சொந்தக் குரலில் பேச வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

தாய் மொழியான மலையாளத்திலோ இவரை பேசவே விடுவதில்லையாம்.வருத்தப்படுகிறார் கோபிகா.

இதேபோல திருமுருகன் இயக்கத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வரும் எம்டன்மகன் படத்திலும் கோபிகா படு அழகாக வருகிறாராம்.

இதுவரை இல்லாத அளவுக்கு மேக்கப்பிலும், ஹேர் ஸ்டைலிலும் கொஞ்சம் மாற்றம்செய்து புத்தம் புது காப்பியாக ரசிகர்களை அசத்தப் போகிறாராம் கோபிகா.

அம்மணி கையில் இப்போது மலையாளத்தில் நிறையப் படங்கள். அதேபோலதமிழிலும் நிறையப் படங்கள் வரத் தொடங்கியுள்ளதாம். இதனால் பட்டாம்பூச்சிபோல பறக்க ஆரம்பித்துள்ளார் கோபிகா.

சிறகடித்துப் பறக்கட்டும்!

Read more about: gopika in aran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil