கொல கொலயா கோபிகா! கனா கண்டேன் மூலம் கவர்ச்சிக் களத்தில் குதித்த கோபிகா மீண்டும் ஒரு படத்தில் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். ஆட்டோகிராப் மூலம் தமிழுக்கு வந்த கோபிகா, குடும்பக் குத்துவிளக்கு கோலத்தில் இருந்ததால், சாவித்திரி போல, ரேவதிபோல குடும்பப் பாங்காக வருவார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள், எழுதினார்கள். ஆனால் கனா கண்டேன் மூலம் அதற்கு ஸ்டாப் கொடுத்து விட்டார் கோபிகா. ஸ்ரீகாந்துடன் உதடு உரச, முட்டி மோதி, கிளாமர்காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் கோபிகா. ஒரு பாட்டுக்குத் தான் அப்படி நடிக்க வேண்டியதாயிற்று, இதை வைத்து என்ன கிளாமர் நாயகி என்று கூறி விடாதீர்கள் என்றுஅதற்கு சப்பைக் கட்டும் கட்டினார். என்ன தான் கோபிகா அப்படிக் கூறினாலும், ஒரு தடவைத் தொட்டு ருசித்து விட்டால் மறு தடவையும் ருசி பார்க்கத் தூண்டுமாம்ஊறுகாய் கதையாக, மீண்டும் ஒரு பாட்டுக்குக் கவர்ச்சி கதகளி ஆடியுள்ளார் கோபிகா. பொன்னியின் செல்வன் படத்தில் தான் இந்த கிளாமர் கிளுகிளுப்புப் பாட்டு வருகிறது. ஹீரோ ரவி கிருஷ்ணாவும், கோபிகாவும்இந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்கள். படு கிளாமராக இந்தப் பாட்டில் காஸ்ட்யூம் அணிந்து அசத்தியுள்ளாராம்கோபிகா. ரூ. 10 லட்சம் செலவில் இதற்காக ஸ்பெஷல் செட் போட்டு சுட்டுள்ளார்கள். கொல கொலயா கொல கொலயா .. முந்திரிக்காலுஇந்த குமரிப் பொண்ணு கூட வந்தா குதிரைவாலு .. அலை அலையா அலை அலையா ஆசை வச்சாலே - அடங்காத ஆட்டம்வரும் என்று போகும் இந்தப் பாட்டுக்காக ரவிகிருஷ்ணாவும், கோபிகாவும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்களாம். மூன்று விதமான கிளாமர் காஸ்ட்யூமில் வருகிறார் கோபிகா. இவர்களோடு 50 டான்சர்களும் கூட சேர்ந்துஆடியிருக்கிறார்களாம். இந்தப் பாட்டுக்காக சென்னை ஸ்டுடியோவிலேயே ஊட்டி மலைப் பிரதேசம் போல பிரமாண்டமாகசெட் போட்டிருக்கிறார்கள். அதில் வைத்துத் தான் கொல கொலயா பாட்டுக்கு கோபிகா ஆட்டம் போட்டுள்ளார். ஒரு பாட்டுக்குத்தான் என்று கூறி கனாகண்டேனை சமாளித்தார் கோபிகா. இப்போது இன்னொரு பாட்டும் வந்து விட்டது. இதுக்கு என்னா காரணம் சொல்லப்போறாரோ!

By Staff

கனா கண்டேன் மூலம் கவர்ச்சிக் களத்தில் குதித்த கோபிகா மீண்டும் ஒரு படத்தில் கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

ஆட்டோகிராப் மூலம் தமிழுக்கு வந்த கோபிகா, குடும்பக் குத்துவிளக்கு கோலத்தில் இருந்ததால், சாவித்திரி போல, ரேவதிபோல குடும்பப் பாங்காக வருவார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள், எழுதினார்கள்.

ஆனால் கனா கண்டேன் மூலம் அதற்கு ஸ்டாப் கொடுத்து விட்டார் கோபிகா. ஸ்ரீகாந்துடன் உதடு உரச, முட்டி மோதி, கிளாமர்காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் கோபிகா.


ஒரு பாட்டுக்குத் தான் அப்படி நடிக்க வேண்டியதாயிற்று, இதை வைத்து என்ன கிளாமர் நாயகி என்று கூறி விடாதீர்கள் என்றுஅதற்கு சப்பைக் கட்டும் கட்டினார்.

என்ன தான் கோபிகா அப்படிக் கூறினாலும், ஒரு தடவைத் தொட்டு ருசித்து விட்டால் மறு தடவையும் ருசி பார்க்கத் தூண்டுமாம்ஊறுகாய் கதையாக, மீண்டும் ஒரு பாட்டுக்குக் கவர்ச்சி கதகளி ஆடியுள்ளார் கோபிகா.

பொன்னியின் செல்வன் படத்தில் தான் இந்த கிளாமர் கிளுகிளுப்புப் பாட்டு வருகிறது. ஹீரோ ரவி கிருஷ்ணாவும், கோபிகாவும்இந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்கள். படு கிளாமராக இந்தப் பாட்டில் காஸ்ட்யூம் அணிந்து அசத்தியுள்ளாராம்கோபிகா.


ரூ. 10 லட்சம் செலவில் இதற்காக ஸ்பெஷல் செட் போட்டு சுட்டுள்ளார்கள். கொல கொலயா கொல கொலயா .. முந்திரிக்காலுஇந்த குமரிப் பொண்ணு கூட வந்தா குதிரைவாலு .. அலை அலையா அலை அலையா ஆசை வச்சாலே - அடங்காத ஆட்டம்வரும் என்று போகும் இந்தப் பாட்டுக்காக ரவிகிருஷ்ணாவும், கோபிகாவும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்களாம்.

மூன்று விதமான கிளாமர் காஸ்ட்யூமில் வருகிறார் கோபிகா. இவர்களோடு 50 டான்சர்களும் கூட சேர்ந்துஆடியிருக்கிறார்களாம். இந்தப் பாட்டுக்காக சென்னை ஸ்டுடியோவிலேயே ஊட்டி மலைப் பிரதேசம் போல பிரமாண்டமாகசெட் போட்டிருக்கிறார்கள்.

அதில் வைத்துத் தான் கொல கொலயா பாட்டுக்கு கோபிகா ஆட்டம் போட்டுள்ளார். ஒரு பாட்டுக்குத்தான் என்று கூறி கனாகண்டேனை சமாளித்தார் கோபிகா. இப்போது இன்னொரு பாட்டும் வந்து விட்டது. இதுக்கு என்னா காரணம் சொல்லப்போறாரோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X