»   »  கோபிகாவைத் துரத்தும் கிளாமர்!

கோபிகாவைத் துரத்தும் கிளாமர்!

Subscribe to Oneindia Tamil

வேண்டாம் வேண்டாம் என்று கோபிகா ஓடினாலும், கிளாமர் ரோல்கள் அவரைத்துரத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

இன்று வரும் ஹீரோயின்களில் முக்கால்வாசிப் பேர் கிளாமரையை பிரதானமுதலீடாகக் கொண்டு களம் இறங்குகிறார்கள். ஆனால் அவர்களில் படுவித்தியாசமானவர் கோபிகா.

முதல் படத்திலேயே அடக்கம் ஒடுக்கமாக நடித்து விட்டதாலோ என்னவோ, கிளாமர்பக்கம் தலையை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்கிறார். கனா கண்டேன் படத்தில்லேசு பாசான கிளாமர் காட்டியதற்கே ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி,ஸ்ரீகாந்த்துடன் இணைத்து வைத்தும் பேசப்பட்டதால் தமிழ் மீடியாக்கள் மீது இன்னும்கூட கோபமாகத்தான் இருக்கிறார் கோபிகா.

இந்த பிரச்சினை காரணமாகத்தான் சில காலம் தமிழில் நடிக்காமல் மலையாளக்கரையோரம் ஒதுங்கியிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான எம் மகன் படம்கோபிகாவுக்கு தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு புது வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் மெகா வெற்றி காரணமாக ஏராளமான புதுப் படங்கள் வந்துள்ளதாம்கோபிகாவுக்கு. ஆனால் ஏற்கனவே ஒத்துக் கொண்ட இரண்டு மலையாளப் படங்கள்இருப்பதால் தமிழில் புதுப் படங்களை ஒத்துக் கொள்ளாமல் கிடப்பில்வைத்துள்ளாராம்.

ஆனால் புதிதாக ஒரு தெலுங்குப் படத்தை ஒத்துக் கொண்டுள்ளாராம் கோபிகா. அதில்புதுக நாயகன் ரிஷி என்பவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் கோபிகா.

மேட்டருக்கு வருவோம். கோபிகாவை எப்படியாவது கிளாமர் ரோலில் நடித்துவைத்து விட வேண்டும் என்று சில தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் லொங்குலொங்கென்று அலைகிறார்களாம்.

சம்பளத்தை உயர்த்தித் தருகிறோம். போனஸாக, காட்டும் கிளாமருக்கேற்றபடிகூடுதலாக பணமும் தருகிறோம் என்று கோபிக்கு ஆசை காட்டுகிறார்களாம் அந்தபெத்த ராயுடுக்கள்.

ஆனால் கிளாமருக்கு சான்ஸே கிடையாது என்று பிடிவாதமாக கூறி வருகிறாராம்கோபிகா. அவர் மறுத்து விட்டாலும் கூட தொடர்ந்து தங்களது முயற்சிகளில் படுதீவிரமாகத்தான் இருக்கிறார்களாம் மணவாடுக்கள். அடிக்க அடிக்க காயும் கனியும்என்பது போல தொடர்ந்து விரட்டினால் ஒரு நாள் சம்மதிப்பார் என்ற நப்பாசைதான்இதற்குக் காரணம்.

ஆனால் கோபிகாவின் ரூட் படு கிளியராக இருக்கிறது. அவர் இதுவரை ஒப்புக்கொண்டுள்ள படங்கள் எதிலுமே கிளாமர் கிடையாதாம். நெருக்கமான உம்மாகாட்சிகள் கூட கிடையாதுன்னா பார்த்துங்கோங்களேன்.பரவாயில்லையே!

Read more about: gopika avoid glamour role

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil