»   »  ஓ அன்பு தங்கச்சி கோபிகா

ஓ அன்பு தங்கச்சி கோபிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோபிகா ரொம்ப விவரமா ஆளுதான். யார் கூட எப்படி நடிக்கனும், என்ன மாதிரியான ரோலைத் தேடிப் பிடித்துநடிக்கனும் என்பதில் படு தெளிவாக இருக்கிறார்.

மலாையளத்தில் அறிமுகமாகி, தமிழில் வெற்றிக் கொடி நாட்டி, மீண்டும் மலையாளத்திற்கே திரும்பி படு பிசியாகநடித்து வருகிறார் கோபிகா.

அதிக படங்களில் தமிழில் நடித்து வந்த கோபிகா இப்போது தமிழை விட மலையாளத்துக்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கிறார். அதை விடவும் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதில் படு தீவிரமாகஇருக்கிறார்.

அதிலும் கூட தெளிவான ஒரு பாலிஸியை வைத்துள்ளார் கோபிகா. அதாவது மூத்த நடிகர்களின் படங்களில்நடிக்க வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தங்கச்சியாக நடிக்க வேண்டும்என்பதில்தான் உறுதியாக உள்ளார்.

எதுக்கு இப்படி பாச பாலிஸி என்று கேட்டால் கோபிகா தரப்பு படு ரகசியாக அதன் சூட்சுமத்தைமுனுமுனுக்கிறது. மூத்த நடிகர்களுடன் ஜோடியாக நடித்தால் தொடர்ந்து அப்படிப்பட்ட வாய்ப்புகள்தான் அதிகம்வரும். அதையும் தவிர்க்க வேண்டும், அதேசமயம் மூத்த-முன்னணி நடிகர்களின் படங்களிலும் இருக்கவேண்டும். அதுக்கேத்த ஒரே ரோல் தங்கச்சி ரோல்தான். அதனால்தான் அப்படி நடிக்கிறாராம் கோபிகா.

இந்த மூத்த நடிகர்களின் படங்களில் உள்ள தங்கச்சி ரோல்களை தேடித்தேடி போய் வாங்கி விடுகிறார் கோபிகா.சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லையாம்.

சுரேஷ் கோபியின் இரண்டு படங்களில் தங்கச்சியாக வரும் கோபிகா மம்முட்டியின் ஒரு படத்திலும் தங்கச்சியாகவருகிறார்.

மூத்தோருடன் தொடர்ந்து இப்படியே தங்கச்சியாக வாழ முடிவு செய்துள்ள கோபிகா, இளம் நடிகர்களுடன்மட்டும் ஜோடி போட்டு ஜோராக நடிக்கப் போகிறாராம்.

மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்தும் அதே நேரத்தில், தமிழில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே,தனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற படங்களில் மட்டுமே நடிக்கப் போகிறாராம்.

ஓ.. அன்பு தங்கச்சி...
கண்ணு கொளமாச்சி...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil