»   »  கோபிகாவை குஷிப்படுத்திய சீயான்! விசனத்தில் இருக்கும் கோபிகா சேச்சி குபீர் உற்சாகமடைந்துள்ளார். சந்தோஷத்திற்கு காரணம் சீயான். ஆட்டோகிராப் வந்தபுதிதில் கோபிகாவுக்கு பயங்கர கிரேஸ் ஏற்பட்டது. பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எல்லாப் பேரும் குருவி ஜோதிடம் கூறினார்கள். அதற்கேற்ப கோபிகாவும் படு வேகமாகமுன்னேறி வந்தார். யார் கண்பட்டதோ, தெரியவில்லை, சேச்சி மூக்கைச் சிந்தும் அளவுக்கு அவரது மார்க்கெட் அம்பேல்ஆனது. கையில் படங்கள் இல்லாததால், மலையாளத்துக்குத் தாவி விட்டார் கோபிகா. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஆன் லைனில்இருக்கும் நடிகைகள் தான் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க முடியும். கொஞ்சம் ஆப்லைன் ஆகி விட்டால்அம்புட்டு தான், ஏறக் கட்டி விடுவார்கள். இந்த உண்மையை கோபிகா புரிந்திருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு மார்க்கெட் ஊத்திக் கிடக்கிறதே!

கோபிகாவை குஷிப்படுத்திய சீயான்! விசனத்தில் இருக்கும் கோபிகா சேச்சி குபீர் உற்சாகமடைந்துள்ளார். சந்தோஷத்திற்கு காரணம் சீயான். ஆட்டோகிராப் வந்தபுதிதில் கோபிகாவுக்கு பயங்கர கிரேஸ் ஏற்பட்டது. பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எல்லாப் பேரும் குருவி ஜோதிடம் கூறினார்கள். அதற்கேற்ப கோபிகாவும் படு வேகமாகமுன்னேறி வந்தார். யார் கண்பட்டதோ, தெரியவில்லை, சேச்சி மூக்கைச் சிந்தும் அளவுக்கு அவரது மார்க்கெட் அம்பேல்ஆனது. கையில் படங்கள் இல்லாததால், மலையாளத்துக்குத் தாவி விட்டார் கோபிகா. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஆன் லைனில்இருக்கும் நடிகைகள் தான் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க முடியும். கொஞ்சம் ஆப்லைன் ஆகி விட்டால்அம்புட்டு தான், ஏறக் கட்டி விடுவார்கள். இந்த உண்மையை கோபிகா புரிந்திருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு மார்க்கெட் ஊத்திக் கிடக்கிறதே!

Subscribe to Oneindia Tamil
விசனத்தில் இருக்கும் கோபிகா சேச்சி குபீர் உற்சாகமடைந்துள்ளார். சந்தோஷத்திற்கு காரணம் சீயான். ஆட்டோகிராப் வந்தபுதிதில் கோபிகாவுக்கு பயங்கர கிரேஸ் ஏற்பட்டது.

பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எல்லாப் பேரும் குருவி ஜோதிடம் கூறினார்கள். அதற்கேற்ப கோபிகாவும் படு வேகமாகமுன்னேறி வந்தார். யார் கண்பட்டதோ, தெரியவில்லை, சேச்சி மூக்கைச் சிந்தும் அளவுக்கு அவரது மார்க்கெட் அம்பேல்ஆனது.

கையில் படங்கள் இல்லாததால், மலையாளத்துக்குத் தாவி விட்டார் கோபிகா. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஆன் லைனில்இருக்கும் நடிகைகள் தான் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க முடியும். கொஞ்சம் ஆப்லைன் ஆகி விட்டால்அம்புட்டு தான், ஏறக் கட்டி விடுவார்கள்.

இந்த உண்மையை கோபிகா புரிந்திருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு மார்க்கெட் ஊத்திக் கிடக்கிறதே!கோபிகா கையில் இருந்த ஒரே தமிழ்ப் படம் அசோகமித்ரன் தான். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது.

இப்போது இந்தப் படம் கைவிடப்பட்டு விட்டதாம். தனுஷுக்கும், கோபிகாவுக்கும் மார்க்கெட் இல்லாத நிலையில்இருவரையும் வைத்து எடுத்துப் போண்டியாக தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லையாம். இந்த விசனத்தில் இருக்கும்கோபிகாவுக்கு உற்சாகமூட்டியுள்ளார் சீயான்.

எப்படி? சமீபத்தில் கோபிகாவும், திலீப்பும் நடித்த சாந்துப்பொட்டு என்ற மலையாளப் படம் ரிலீஸ் ஆனது. படம் சூப்பர் ஹிட்.இதில் கோபிகாவின் நடிப்பை அத்தனை பேரும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இப்படம் தமிழுக்கும் வருகிறது. சீயான் விக்ரம் தான் திலீல் நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் திருவனந்தபுரத்தில்நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள விக்ரம் அழைக்கப்பட்டிருந்தார். விக்ரம் போயிருந்தார்.

அதே விழாவுக்கு கோபிகாவும் வந்திருந்தார். சீயானைப் பார்த்த சேச்சி ஒரு நமஸ்காரம் வைத்துள்ளார். பதிலுக்கு நமஸ்காரம்வைத்த சீயான், சாந்துப்பொட்டில் உங்களோட நடிப்பு அட்டகாசம், ஏ.ஒன். நிச்சயம் நீங்களும் நானும் சேர்ந்து தமிழில் ஒரு படம்பண்ணுவோம், அதற்கு நான் கியாரண்டி என்று புகழ்ச்சியுடன் கூடவே ஒரு பட வாய்ப்பையும் அள்ளி விட்டுள்ளார் சீயான்.

நொந்து போன வயித்துக்கு நூடுல்ஸ் கிடைத்தது போல குஷியாகி விட்டார் கோபிகா. அய்யோ, உங்க கூட நடிக்க நான் தவமாய்தவமிருக்கிறேன். நிச்சயம் உங்களோட சேர்ந்து நடிக்கனும் என்று உற்சாகமாக கூறியுள்ளார்.

அதே குஷியுடன் கையில் உள்ள மலையாளப் படங்களை வேகமாக நடித்துக் கொடுத்து வருகிறாராம் கோபிகா. மீண்டும்தமிழுக்கு வரப் போகிறார் கோபிகா, நயனதாராக்களே, ஆசின்களே ஜாக்கிரதை!

Read more about: gopika to pair with vikram
Please Wait while comments are loading...