கோபிகாவுக்கு வேட்டை
ஆட்டோகிராப்புக்குப் பின் எங்கோயோ போகப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோபிகா.. எங்கும்இல்லாமல் போய்விட்டார். நீண்ட தொய்வுக்குப் பின் இப்போது கோபிகா நிமிர்ந்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்திரி தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாரிக்கும் பிரம்மாண்டமானஆரண் படத்தில் மோகன்லால், ஜீவாவுடன் கோபிகாவும் நடிக்கிறார்.
அடுத்தாக சத்யஜோதி பிலிம்ஸ் தனது வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில் சத்யா மூவிஸ்நிறுவனத்துடன் இணைந்து எம்டன் மகன் என்ற படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறது. இதில்பரத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் கோபிகா.
அடுத்தாக ராமேஸ்வரம் உள்ள அகதிகள் முகாமை மையமாக வைத்து உருவாகும் உனக்காக என்ற படத்திலும்கோபிகாவே ஹீரோயின். இதிலும் ஹூரோ ஜீவா தான்.
இந் நிலையில் மலையாத்தில் திலீப் நடித்து ஹிட்டான சாந்து பொட்டு படம் தமிழில் உருவாகப் போகிறது. பீமாபடத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில் அரவாணி வேடத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இதில் ஹீரோயினாககோபிகாவை புக் பண்ணச் சொல்லிவிட்டாராம் விக்ரம்.
இப்படி ஒரு பக்கம் தமிழ் படங்கள் குவிந்து வண்ணம் இருக்க, அக்கா மலையாளத்தில் பிஸியாகியிருக்கிறார். திடைகர் படத்துக்குப் பின் மீண்டும் மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் நடிக்க இருக்கிறராம் கோபிகா.
இப்படியாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக இருக்கும் கோபிகாவைத் தேடி இப்போதுதெலுங்கு வாய்ப்புக்களும் நிறையவே குவிந்து வருகின்றன.
சேச்சி காட்டில் அடை மழை..


Click it and Unblock the Notifications