»   »  கோபிகாவின் திடீர் தமிழ் பாசம் !

கோபிகாவின் திடீர் தமிழ் பாசம் !

Subscribe to Oneindia Tamil

திடீரென தமிழ்ப் படங்கள் குறித்தும், தமிழ் ரசிகர்கள் குறித்தும் பாசமாக பேச ஆரம்பித்துள்ளார் கோபிகா.

ஆட்டோகிராப் மூலம் தமிழுக்கு அறிமுகமான இந்த மலையாளத்து மஞ்சள் கிழங்கு, இப்போது முன்னணி நாயகியாகி விட்டார். ஆட்டோகிராப்தொடர்ந்து வந்த கனா கண்டேன் ஆகிய இரண்டு படங்களிலும் கோபிகாவின் வேடம் பேசப்படுவதாலும், கை நிறையப் படங்கள் குவிந்தவண்ணம்இருப்பதாலும் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார் கோபிகா சேச்சி.

தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மலையாளத் திரைப்படங்களையும், மலையாள இயக்குநர்களையும் புகழ்ந்து பேசியவண்ணம் இருப்பாராம் கோபிகா.ஆட்டோகிராப் ஷூட்டிங்கில் கூட, மலையாளத் திரையுலகை ரொம்பவே ஏத்திப்பேசியபடி இருப்பாராம்.

மலையாளத்தில் எதார்த்தமாக படம் எடுப்பார்கள், அவார்டுகளை வாங்கவே பிறந்தவர்கள், ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் மதிப்புஅதிகம், ஹீரோயின்களை கவர்ச்சி காட்ட மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மசாலாப் படங்களைத் தான் தமிழ் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றெல்லாம்அம்மணி அளந்து கொண்டிருப்பார்.

ஆனால் சேச்சியிடம் இப்போது தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். என்னதான் தனது தாய்மொழிக்காரர்களை விட்டுக் கொடுக்காமல்கோபிகா பேசினாலும், பட வாய்ப்புகளும், சம்பளமும் ஏறிக் கொண்டிருப்பது தமிழில்தான். அதை கொஞ்சம் லேட்டாகப் புரிந்து கொண்டுள்ள கோபிகா,இப்போது தமிழ் சினிமா குறித்தும், தமிழ் ரசிகர்கள் குறித்தும் உயர்வாகப் பேசத் தொடங்கியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் திறமைசாலிகள் நிறைய இருக்கிறார்கள், திறமையை சரியாகப் பயன்படுத்துகிறார்கள், என்னைப் போன்றவர்களுக்கு மலையாளத்தில்இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காது, வெளி மொழிக்காரர்களாக இருந்தாலும் தமிழர்கள் ஆதரவு கொடுப்பது பாராட்டுக்குரியது என்ற ரேஞ்சுக்குபேசத் தொடங்கி விட்டாராம் கோபிகா.

தற்போது சிம்புவுடன் அவர் நடித்து வரும் தொட்டி ஜெயா படமும் தனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் கோபிகா,படத்திற்குத் தேவைப்பட்டால், கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற கொள்கை முடிவையும் எடுத்துள்ளாராம்.

கனா கண்டேனில் வருவது போன்ற காட்சிகள் அமைந்தால் கவர்ச்சி காட்டத் தயார் என்று தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் அம்மணி அடித்துக்கூறுகிறாராம்.

எல்லாம் சரி, ஸ்ரீகாந்த்துடன் காதல் என்று பேச்சு வருகிறதே என்று கோபிகாவிடம் கேட்டால், அய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்லை, கனாகண்டேனில் ஒரு பாட்டில், இயக்குநர் கேட்டுக் கொண்டதால் கொஞ்சம் தாரளமாக, நெருக்கம் காட்டி நடித்தேன். அதை வைத்து கதை கட்டி விட்டுவிட்டார்கள் என்கிறார்.

நெருப்பில்லாமல் புகையாது என்பது கோபிகாவுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புவோம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil