»   »  விக்ரமுடன் ஜோடி சேரும் கோபிகா சேச்சி கோபிகா இப்போ ரொம்ப பிஸி. இங்கே அல்ல. தனது சொந்த மொழியான மலையாளத்தில்.ஆட்டோகிராப்புக்குப் பின் தொட்டி ஜெயா, கனாக் கண்டேன், பொன்னியின் செல்வன் என சில படங்களில் தலைகாட்டியகோபிகா கவர்ச்சிக்குத் தாவினார்.அப்படியே ஒரு ரவுண்டு தெலுங்கிலும் எட்டிப் பார்த்தார். தெலுங்கில் நினைத்தபடி சான்ஸ் பிடிக்க முடியவில்லை. நன்றாகநடித்தாலும் கூட தமிழிலும் சேரனைத் தவிர மற்றவர்கள் யாரும் கோபிகாவை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.இந் நிலையில் தான் சொந்த ஊரான கேரளா அழைத்தது. இப்போது மலையாளத்தில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்கோபிகா. ஒரே நேரத்தில் அங்கு 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தீபாவளியின்போது இவரைப் பேட்டி காண தமிழ் டிவிக்காரர்கள் முயன்றபோது கேரளத்தில் சூட்டிங்கில் இருந்தார்கோபிகா. இதனால் அவரை கேரளாவுக்குச் சென்று பேட்டியெடுத்துவிட்டுத் திரும்பினார்கள் நம் ஊர் டிவிக்காரர்கள். அந்தஅளவுக்கு அங்கே செம பிஸியாம்.சேரன் தனது பொக்கிஷம் படத்துக்காக கோபிகாவை நடிக்கக் கூப்பிட்டபோது டேட்ஸ் இல்லை என்று கூறிவிட்டாராம். ஏற்கனவேதவமாய் தவமிருந்து படத்துக்கும் சேரன் அழைப்பு விடுத்தார். அப்போதும் மலையாளத்தில் பிஸி என்று கூறிவிட்டார் கோபிகா.முன்னணி கேரள நடிகைகள் எல்லாம் தமிழ், தெலுங்குக்கு பொட்டியைக் கட்டிவிட்டதால் அங்கு காலியாகக் கிடக்கும் இடத்தைகோபிகா பிடித்துவிட்டார் என்கிறார்கள். ரொம்ப வெவரமான சேச்சி.இப்போது கோபிகா புக் ஆகியிருக்கும் ஒரே தமிழப் படம் அசோகமித்திரன் தான். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில்சம்பளம் அதிகமாக இருந்ததால் கதையைக் கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்தாராம் கோபிகா. ஆனால், படத்துக்கு பைனான்ஸ் செய்ய இருந்தவர்கள் கடைசியில் காலை வாரிவிட்டார்களாம். தனுஷின் மார்க்கெட் மீதுஅவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இதனால் அந்தப் படத்தை தானே தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம் தனுஷ்.இந் நிலையில் மலையாளத்தில் கோபிகா நடித்த சாந்து பொட்டு படம் தமிழில் உருவாக இருக்கிறது. அரவாணிக்கும் ஒருபெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் தான் கதை.இந்தப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் விக்ரம் அதை தமிழில் எடுக்கவுள்ளார். அரவாணியாக நடிக்கவும் போகிறார்.அதில் தனக்கு கோபிகாவையே ஜோடியாகப் போடுமாறு கூறிவிட்டாராம். இதனால் விரைவில் விக்ரமுடன் நடிக்க சேச்சி திரும்பிகோலிவுட்டுக்கு வர இருக்கிறார்.கொசுரு:கேரளத்தில் மிகப் பெரிய நான்வெஜ் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார் கோபிகா. அத்தோடு தனது தங்கை க்ளினியையும்சினிமாவில் இறக்கிவிட தயார்படுத்தி வருகிறார்.

விக்ரமுடன் ஜோடி சேரும் கோபிகா சேச்சி கோபிகா இப்போ ரொம்ப பிஸி. இங்கே அல்ல. தனது சொந்த மொழியான மலையாளத்தில்.ஆட்டோகிராப்புக்குப் பின் தொட்டி ஜெயா, கனாக் கண்டேன், பொன்னியின் செல்வன் என சில படங்களில் தலைகாட்டியகோபிகா கவர்ச்சிக்குத் தாவினார்.அப்படியே ஒரு ரவுண்டு தெலுங்கிலும் எட்டிப் பார்த்தார். தெலுங்கில் நினைத்தபடி சான்ஸ் பிடிக்க முடியவில்லை. நன்றாகநடித்தாலும் கூட தமிழிலும் சேரனைத் தவிர மற்றவர்கள் யாரும் கோபிகாவை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.இந் நிலையில் தான் சொந்த ஊரான கேரளா அழைத்தது. இப்போது மலையாளத்தில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்கோபிகா. ஒரே நேரத்தில் அங்கு 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தீபாவளியின்போது இவரைப் பேட்டி காண தமிழ் டிவிக்காரர்கள் முயன்றபோது கேரளத்தில் சூட்டிங்கில் இருந்தார்கோபிகா. இதனால் அவரை கேரளாவுக்குச் சென்று பேட்டியெடுத்துவிட்டுத் திரும்பினார்கள் நம் ஊர் டிவிக்காரர்கள். அந்தஅளவுக்கு அங்கே செம பிஸியாம்.சேரன் தனது பொக்கிஷம் படத்துக்காக கோபிகாவை நடிக்கக் கூப்பிட்டபோது டேட்ஸ் இல்லை என்று கூறிவிட்டாராம். ஏற்கனவேதவமாய் தவமிருந்து படத்துக்கும் சேரன் அழைப்பு விடுத்தார். அப்போதும் மலையாளத்தில் பிஸி என்று கூறிவிட்டார் கோபிகா.முன்னணி கேரள நடிகைகள் எல்லாம் தமிழ், தெலுங்குக்கு பொட்டியைக் கட்டிவிட்டதால் அங்கு காலியாகக் கிடக்கும் இடத்தைகோபிகா பிடித்துவிட்டார் என்கிறார்கள். ரொம்ப வெவரமான சேச்சி.இப்போது கோபிகா புக் ஆகியிருக்கும் ஒரே தமிழப் படம் அசோகமித்திரன் தான். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில்சம்பளம் அதிகமாக இருந்ததால் கதையைக் கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்தாராம் கோபிகா. ஆனால், படத்துக்கு பைனான்ஸ் செய்ய இருந்தவர்கள் கடைசியில் காலை வாரிவிட்டார்களாம். தனுஷின் மார்க்கெட் மீதுஅவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இதனால் அந்தப் படத்தை தானே தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம் தனுஷ்.இந் நிலையில் மலையாளத்தில் கோபிகா நடித்த சாந்து பொட்டு படம் தமிழில் உருவாக இருக்கிறது. அரவாணிக்கும் ஒருபெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் தான் கதை.இந்தப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் விக்ரம் அதை தமிழில் எடுக்கவுள்ளார். அரவாணியாக நடிக்கவும் போகிறார்.அதில் தனக்கு கோபிகாவையே ஜோடியாகப் போடுமாறு கூறிவிட்டாராம். இதனால் விரைவில் விக்ரமுடன் நடிக்க சேச்சி திரும்பிகோலிவுட்டுக்கு வர இருக்கிறார்.கொசுரு:கேரளத்தில் மிகப் பெரிய நான்வெஜ் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார் கோபிகா. அத்தோடு தனது தங்கை க்ளினியையும்சினிமாவில் இறக்கிவிட தயார்படுத்தி வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சேச்சி கோபிகா இப்போ ரொம்ப பிஸி. இங்கே அல்ல. தனது சொந்த மொழியான மலையாளத்தில்.

ஆட்டோகிராப்புக்குப் பின் தொட்டி ஜெயா, கனாக் கண்டேன், பொன்னியின் செல்வன் என சில படங்களில் தலைகாட்டியகோபிகா கவர்ச்சிக்குத் தாவினார்.

அப்படியே ஒரு ரவுண்டு தெலுங்கிலும் எட்டிப் பார்த்தார். தெலுங்கில் நினைத்தபடி சான்ஸ் பிடிக்க முடியவில்லை. நன்றாகநடித்தாலும் கூட தமிழிலும் சேரனைத் தவிர மற்றவர்கள் யாரும் கோபிகாவை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

இந் நிலையில் தான் சொந்த ஊரான கேரளா அழைத்தது. இப்போது மலையாளத்தில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்கோபிகா. ஒரே நேரத்தில் அங்கு 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் தீபாவளியின்போது இவரைப் பேட்டி காண தமிழ் டிவிக்காரர்கள் முயன்றபோது கேரளத்தில் சூட்டிங்கில் இருந்தார்கோபிகா. இதனால் அவரை கேரளாவுக்குச் சென்று பேட்டியெடுத்துவிட்டுத் திரும்பினார்கள் நம் ஊர் டிவிக்காரர்கள். அந்தஅளவுக்கு அங்கே செம பிஸியாம்.

சேரன் தனது பொக்கிஷம் படத்துக்காக கோபிகாவை நடிக்கக் கூப்பிட்டபோது டேட்ஸ் இல்லை என்று கூறிவிட்டாராம். ஏற்கனவேதவமாய் தவமிருந்து படத்துக்கும் சேரன் அழைப்பு விடுத்தார். அப்போதும் மலையாளத்தில் பிஸி என்று கூறிவிட்டார் கோபிகா.

முன்னணி கேரள நடிகைகள் எல்லாம் தமிழ், தெலுங்குக்கு பொட்டியைக் கட்டிவிட்டதால் அங்கு காலியாகக் கிடக்கும் இடத்தைகோபிகா பிடித்துவிட்டார் என்கிறார்கள். ரொம்ப வெவரமான சேச்சி.

இப்போது கோபிகா புக் ஆகியிருக்கும் ஒரே தமிழப் படம் அசோகமித்திரன் தான். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில்சம்பளம் அதிகமாக இருந்ததால் கதையைக் கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்தாராம் கோபிகா.


ஆனால், படத்துக்கு பைனான்ஸ் செய்ய இருந்தவர்கள் கடைசியில் காலை வாரிவிட்டார்களாம். தனுஷின் மார்க்கெட் மீதுஅவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இதனால் அந்தப் படத்தை தானே தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம் தனுஷ்.

இந் நிலையில் மலையாளத்தில் கோபிகா நடித்த சாந்து பொட்டு படம் தமிழில் உருவாக இருக்கிறது. அரவாணிக்கும் ஒருபெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் தான் கதை.

இந்தப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் விக்ரம் அதை தமிழில் எடுக்கவுள்ளார். அரவாணியாக நடிக்கவும் போகிறார்.அதில் தனக்கு கோபிகாவையே ஜோடியாகப் போடுமாறு கூறிவிட்டாராம். இதனால் விரைவில் விக்ரமுடன் நடிக்க சேச்சி திரும்பிகோலிவுட்டுக்கு வர இருக்கிறார்.

கொசுரு:

கேரளத்தில் மிகப் பெரிய நான்வெஜ் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார் கோபிகா. அத்தோடு தனது தங்கை க்ளினியையும்சினிமாவில் இறக்கிவிட தயார்படுத்தி வருகிறார்.

Read more about: gopika to pair with vikram

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil