மீராவை வென்ற கோபிகா கோபிகாவுக்கும் கேரளத்துக் குசும்பு தொற்றிக் கொண்டு விட்டது. கேரள பத்திரிக்கைகளுக்குப் பேட்டி தரும்போதெல்லாம் தமிழ்சினிமாவை வாரி விடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் ஆரம்பத்தில் தமிழே, அதே என்று கொஞ்சிக் குலாவுவார்கள். கொஞ்சம்செட்டில் ஆன பின்னர் மீண்டும் அக்கரைக்குத் திரும்பி, தங்களை ஆதரித்த தமிழை சரமாரியாக விமர்சனம் செய்வார்கள்.அந்தக் கதை இப்போது கோபிகா விஷயத்திலும் நடந்து வருகிறது. ஆட்டோகிராப் மூலம் அவரை கை பிடித்து தமிழுக்குஅறிமுகம் செய்து வைத்தார் சேரன். அட்டகாசமான முகவரி கிடைத்ததால், படு வேகமாக முன்னேறி முன்னணி நடிகையாகமாறினார் கோபிகா. மளமளவென்று படங்களில் நடித்த கோபிகாவிடம், நம்ம கோபிதானே என்று உரிமையோடு தவமாய் தவமிருந்து படத்திற்குகால்ஷீட் கேட்டார் சேரன். ஆனால் ஸாரி, நான் பிசியாக்கும், கால்ஷீட் இல்லே என்று கூறி சேரனுக்கு ஆப்பு வைத்தார் கோபிகா.கோபமாகிப் போன சேரன், அசப்பில் கோபிகாவைப் போலவே முகச் சாயல் உள்ள பத்மப்ரியாவை தூக்கி வந்து ஹீரோயினாகப்போட்டு அவருக்கு ஒரு நிலையான இடத்தைப் பிடித்துத் தந்துவிட்டார். (பத்மப்ரியா சுத்தமான தமிழ்ப் பெண். கேரளத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர்.)கனா கண்டேன் படத்தில் அவருடன் நடித்த ஸ்ரீகாந்த்துடன் இணைத்து பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கள் வந்ததால் அதிருப்திஅடைந்தார் கோபிகா. தமிழ்ப் பத்திரிக்கைகளே இப்படித்தான், குப்பையாக எழுதுவார்கள். தமிழில் நல்ல கதைகள் படமாக எடுக்கப்படுவதில்லை. ஒருபடத்தில் கிளாமராக நடித்து விட்டால் தொடர்ந்து கிளாமராகவே கதை சொல்கிறார்கள் என்று கடுப்பு காட்டி வருகிறார்.ஆனாலும் கோபிகாவின் தமிழ் சினிமா விமர்சனப் பேட்டிகளையும் மீறி அவருக்கு கோலிவுட் கம்பளம் விரித்துக் கொண்டு தான்இருக்கிறது.ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமை மையமாக வைத்து உனக்காக என்னொரு படம் தயாராகிறது. இதில் ஜீவா ஹீரோவாகநடிக்க, கோபிகாவை ஹீரோயினாகப் போட்டுள்ளார்கள். இத்தனைக்கும் இந்த ரோலைப் பிடிக்க மீரா ஜாஸ்மீன் உள்ளிட்ட 3மலையாள ஹீரோயின்கள் போட்டி போட்டார்களாம். இறுதியில் கோபிகாவே வென்றார்.சமீபகாலமாக கோபிகாவுக்கு போன் மூலம் ஏகப்பட்ட தொல்லையாம். இவரது வீட்டுக்கு கண்ட நேரத்தில் போன் செய்யும்இளைஞர்கள் நடிப்பைப் பாராட்டுவதோடு, அவரது அழகையும் வர்ணிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு கசா முசா என்றுபேசுகிறார்களாம். சமீபத்தில் அப்படிப் பேசிய ஒரு வாலிபரை காலர் ஐடி மூலம் கண்டுபிடித்த கோபிகாவின் அப்பா, போலீசிடம் போகப்போகிறோம் என்று மிரட்ட, அந்த வாலிபரின் குடும்பத்தினர் கோபிகாவின் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டுவிட்டுப்போனார்களாம்.தமிழிலும் மலையாளத்திலும் பிஸியாக இருக்கும் கோபிகாவைத் தேடி தெலுங்கு வாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்துவிட்டன.இதனால் பேங்க் பேலன்ஸ் பெருத்துக் கொண்டே இருப்பதால் பிரமாண்ட பங்களாவைக் கட்டி முடித்திருக்கும் கோபிகா,அடுத்தபடியாக புதிய ரக கார்கள் வாங்குவதை பொழுது போக்காக வைத்திருக்கிறார்.கேரளா என்றாலே விவரம் தானே...

By Staff
கோபிகாவுக்கும் கேரளத்துக் குசும்பு தொற்றிக் கொண்டு விட்டது. கேரள பத்திரிக்கைகளுக்குப் பேட்டி தரும்போதெல்லாம் தமிழ்சினிமாவை வாரி விடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் ஆரம்பத்தில் தமிழே, அதே என்று கொஞ்சிக் குலாவுவார்கள். கொஞ்சம்செட்டில் ஆன பின்னர் மீண்டும் அக்கரைக்குத் திரும்பி, தங்களை ஆதரித்த தமிழை சரமாரியாக விமர்சனம் செய்வார்கள்.

அந்தக் கதை இப்போது கோபிகா விஷயத்திலும் நடந்து வருகிறது. ஆட்டோகிராப் மூலம் அவரை கை பிடித்து தமிழுக்குஅறிமுகம் செய்து வைத்தார் சேரன். அட்டகாசமான முகவரி கிடைத்ததால், படு வேகமாக முன்னேறி முன்னணி நடிகையாகமாறினார் கோபிகா.

மளமளவென்று படங்களில் நடித்த கோபிகாவிடம், நம்ம கோபிதானே என்று உரிமையோடு தவமாய் தவமிருந்து படத்திற்குகால்ஷீட் கேட்டார் சேரன். ஆனால் ஸாரி, நான் பிசியாக்கும், கால்ஷீட் இல்லே என்று கூறி சேரனுக்கு ஆப்பு வைத்தார் கோபிகா.

கோபமாகிப் போன சேரன், அசப்பில் கோபிகாவைப் போலவே முகச் சாயல் உள்ள பத்மப்ரியாவை தூக்கி வந்து ஹீரோயினாகப்போட்டு அவருக்கு ஒரு நிலையான இடத்தைப் பிடித்துத் தந்துவிட்டார்.

(பத்மப்ரியா சுத்தமான தமிழ்ப் பெண். கேரளத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர்.)

கனா கண்டேன் படத்தில் அவருடன் நடித்த ஸ்ரீகாந்த்துடன் இணைத்து பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கள் வந்ததால் அதிருப்திஅடைந்தார் கோபிகா.

தமிழ்ப் பத்திரிக்கைகளே இப்படித்தான், குப்பையாக எழுதுவார்கள். தமிழில் நல்ல கதைகள் படமாக எடுக்கப்படுவதில்லை. ஒருபடத்தில் கிளாமராக நடித்து விட்டால் தொடர்ந்து கிளாமராகவே கதை சொல்கிறார்கள் என்று கடுப்பு காட்டி வருகிறார்.

ஆனாலும் கோபிகாவின் தமிழ் சினிமா விமர்சனப் பேட்டிகளையும் மீறி அவருக்கு கோலிவுட் கம்பளம் விரித்துக் கொண்டு தான்இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமை மையமாக வைத்து உனக்காக என்னொரு படம் தயாராகிறது. இதில் ஜீவா ஹீரோவாகநடிக்க, கோபிகாவை ஹீரோயினாகப் போட்டுள்ளார்கள். இத்தனைக்கும் இந்த ரோலைப் பிடிக்க மீரா ஜாஸ்மீன் உள்ளிட்ட 3மலையாள ஹீரோயின்கள் போட்டி போட்டார்களாம். இறுதியில் கோபிகாவே வென்றார்.

சமீபகாலமாக கோபிகாவுக்கு போன் மூலம் ஏகப்பட்ட தொல்லையாம். இவரது வீட்டுக்கு கண்ட நேரத்தில் போன் செய்யும்இளைஞர்கள் நடிப்பைப் பாராட்டுவதோடு, அவரது அழகையும் வர்ணிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு கசா முசா என்றுபேசுகிறார்களாம்.

சமீபத்தில் அப்படிப் பேசிய ஒரு வாலிபரை காலர் ஐடி மூலம் கண்டுபிடித்த கோபிகாவின் அப்பா, போலீசிடம் போகப்போகிறோம் என்று மிரட்ட, அந்த வாலிபரின் குடும்பத்தினர் கோபிகாவின் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டுவிட்டுப்போனார்களாம்.

தமிழிலும் மலையாளத்திலும் பிஸியாக இருக்கும் கோபிகாவைத் தேடி தெலுங்கு வாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்துவிட்டன.இதனால் பேங்க் பேலன்ஸ் பெருத்துக் கொண்டே இருப்பதால் பிரமாண்ட பங்களாவைக் கட்டி முடித்திருக்கும் கோபிகா,அடுத்தபடியாக புதிய ரக கார்கள் வாங்குவதை பொழுது போக்காக வைத்திருக்கிறார்.

கேரளா என்றாலே விவரம் தானே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X