Meena Pongal Celebration: மூக்குத்தி அம்மன் போல சர்க்கரை பொங்கல் வைத்த நடிகை மீனாவின் கொண்டாட்டம்
சென்னை: 90களில் தொடங்கி, 2000கள் வரை தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்த நடிகை மீனா தனது திருமணத்திற்கு பின்னர் குறிப்பிட்ட கதைகளில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். இன்றைக்கும் மீனா நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்படும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தை திருநாளான தமிழ் புத்தாண்டான இன்று அவர் பொங்கல் வைத்து கொண்டாடியது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மீனா சூப்பர் ஸ்டார் தொடங்கி மெகா ஸ்டார் வரை என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். முத்து படத்தில் கதாநாயகியாக இவர் என்ட்ரி கொடுத்து மொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், ஆக்ஷன் கிங் அர்ஜுன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேப்போல் மலையாள சினிமாவில், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தெலுங்கில் நாகார்ஜுனா, சிரஞ்சீவி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகையாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பராகவும் திரையுலகில் பலரது அன்பை பெற்றவராக மீனா உள்ளார். மீனா எப்படி தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக தொடங்கினாரோ, அதேபோல் தனது மகள் நைனிகாவும் விஜயின் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் சாகரின் மறைவுக்குப் பின்னர் குழந்தையை பார்த்துக் கொள்வது, கிடைக்கும் நேரத்தில் படத்தில் நடிப்பது என இருக்கிறார்.
மீனா பொங்கல் கொண்டாட்டம்: சில மாதங்களுக்கு முன்னர் கூட நட்சத்திர ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார். அப்போது அவர் பாஜகவில் விரைவில் இணையப் போகிறார் என்று எல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் தற்போது அந்த பேச்சுக்கள் எதுவும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் தமிழ்நாட்டு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் நடிகை மீனா தனது இல்லத்தில் பொங்கல் வைத்து பொங்கலைக் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்க்கரை பொங்கல்: குறிப்பாக பூ கோலம் போட்டு, மண் பானையில், விறகு அடுப்பில் சர்க்கரை பொங்கல் வைத்துள்ளார் மீனா. பட்டுப் புடவை கட்டிக் கொண்டு, மீனா பொங்கல் வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மீனா தனது வீடியோவுக்கு, " இந்தப் பொங்கல் திருநாள் நம் வாழ்க்கையை புதிய தொடக்கங்களாலும், மகிழ்ச்சியாலும், வளத்தாலும் நிரப்பட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











