நானும் என்னைப் பற்றிய கிசுகிசுக்களும்... மனம் திறக்கிறார் ப்ரியா ஆனந்த்
சென்னை: அரிமா நம்பி பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த். வை ராஜா வை, இரும்புக் குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என அடுத்தடுத்து இவரது படங்கள் ரிலீசாக உள்ளன.
பட எண்ணிக்கையைப் போலவே இவரைப் பற்றிய கிசுகிசுக்களும் அதிகம். ஒவ்வொரு ப்டத்தில் நடிக்கும் போதும் அப்படத்தின் நாயகனோடி இணைத்துப் பேசப்படுகிறார் ப்ரியா ஆனந்த்.
இந்நிலையில், டைம்பாஸ் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-

கிசுகிசுக்கள் பத்தி...
நிறையப் படங்கள் பண்றேன். அப்போ கிசுகிசு வரத் தானே செய்யும்.

ப்ரெண்ட்லியான ஹீரோ...
நிஜமாச் சொல்றேன். நான்நடிச்ச,நடிக்கிற எல்லா ஹீரோவுமே என்கிட்ட ப்ரெண்ட்லியாத் தான் இருந்தாங்க, இருக்கிறாங்க.

ஈகோ இல்லாதவங்க...
யாருமே ஈகோ பார்க்கலை. உதவியா இருந்தாங்க. நான் அவங்கக்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.

எனது லட்சியம்...
சினிமாவில் எனது லட்சியமே நிறைய ஹிட் படங்கள் கொடுப்பது தான். ஆனா, அது நம்ம கையில இல்லையே.

வெற்றி, தோல்வி...
கதை கேட்கும்போது பிடிச்சு தான் அந்த படத்தை ஒத்துக்கறோம். ஆனா, அப்புறம் அது எடுக்கப்படும் விதம், வெளியாகும் நேரம் , ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் இதையெல்லாம் வச்சுத் தான் வெற்றி தோல்வி முடிவாகுது.

நம்ம டியூட்டி...
நல்லா நடிச்சுக் கொடுக்கணும். நம்மாலே அது தானே முடியும்.

நடித்ததில் பிடித்தது...
வணக்கம் சென்னை படத்துல இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொடுத்த ஹீரோயின் கேரக்டர் தான் ரொம்ப பிடிச்சது. அதுக்காக அவங்களுக்கு ஸ்பெஷலா நன்றி சொல்லணும்.

என் கோணத்தில்...
அந்தக் கதையே என் கேரக்டரோட கோணத்தில் தான் சொல்லப்பட்டு இருக்கும். தவிர அனிருத் மியூஸிக், ரிச்சர்டு நாதன் கேமரானு எல்லாமே நல்லா இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











