கோவாவில் கெளரி கிஷன்.. நீச்சல் குளத்தில் 96 பட நடிகை.. என்னம்மா ஸ்விம் பண்றாங்க.. ட்ரீட் தான்!
சென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கெளரி கிஷன். அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இளம் வயது ஜானுவாக இவரே நடித்திருந்தார். முதல் படத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த கெளரி கிஷன் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக கெளரி கிஷன் நடித்திருப்பார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்திலும் துணை நடிகையாகவே நடித்திருப்பார் கெளரி கிஷன்.

கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள கெளரி கிஷன் அங்கே வில்லா ஒன்றில் நீச்சல் குளத்தில் குளித்து ஜாலி பண்ணும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார்.
குட்டி ஜானு: பிரேம் குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான '96' படத்தில் பள்ளி மாணவியாக குட்டி ஜானுவாக கெளரி கிஷன் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் துணை நடிகையாகவும் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸில் நீச்சல் வீராங்கனையாகவே நடித்திருப்பார் கெளரி கிஷன். இந்நிலையில், தற்போது கோவாவில் நீச்சல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நீச்சல் அடிக்கும் கெளரி: பிகினிங், அடியே, உலகம்மை, ஹாட்ஸ்பாட், போட் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள கெளரி கிஷன் கோவாவுக்கு தனது நண்பர்களுடன் ஜாலி டூர் சென்றுள்ள நிலையில், அங்கே உள்ள வில்லா ஒன்றில் இருந்த நீச்சல் குளத்தில் மோனோகினி உடையில் நீச்சல் அடிக்கும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கிறார் கெளரி கிஷன்.
பிரதீப் ரங்கநாதன் படத்தில்: யோகி பாபுவுடன் போட் படத்தில் நடித்திருந்த கெளரி கிஷன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குவியும் லைக்ஸ்: சுமார் 12 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெளரி கிஷனை ஃபாலோ செய்து வருகின்றனர். 25 வயதான இளம் நடிகை கெளரி கிஷன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது எடுத்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.


Click it and Unblock the Notifications











