இங்க சின்ன வயசு த்ரிஷா, அங்க சமந்தா... '96' தெலுங்கு ரீமேக்கிலும் இவர்தான் ஜானு
சென்னை: தமிழில் சூப்பர் ஹிட்டான '96' படத்தில் தெலுங்கு ரீமேக், ஜானு என்ற பெயரில் உருவாகிறது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 96. பிரேம் குமார் இயக்கி இருந்த இதில் விஜய் சேதிபதியும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.
Recommended Video
அனைவருடைய காதலையும் உலுக்கிப் பார்த்த, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கு ரீமேக்
இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷூம் நடித்திருந்தனர். இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

நடிகை சமந்தா
விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

மாற்றமில்லை
தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

இளவயது ஜானு
இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 96 படத்தில் சிறுவயது த்ரிஷாவாக, கவுரி கிஷன் நடித்திருந்தார். அவரே தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இதை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மீண்டும் இளவயது ஜானுவாக நடிப்பதில் மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











