மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி?
சென்னை: நடிகை கவுதமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக அவர் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.
மோகன்லால் - மீனா நடித்த மலையாளப் படமான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக மீனாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் மீனா வேண்டாம் என்று கூறிவிட்டார் கமல்.

சிம்ரன்
இந்த நிலையில் சிம்ரன் நடிப்பார் என அறிவித்திருந்தனர். ஆனால் தான் நடிக்கவில்லை என்று சிம்ரன் இன்று அறிவித்துவிட்டார்.

கவுதமி
இப்போது மீனா வேடத்தில் கமலின் நிஜ வாழ்க்கைப் பார்ட்னரான கவுதமியையே நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. கவுதமிக்கு இதில் விருப்பமுள்ளதாகத் தெரிகிறது.

கமல் - கவுதமி
ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானாலும், பின்னர் கமல் - கவுதமி பொருத்தமான ஜோடியாகத் திகழ்ந்தனர். தேவர் மகன், குருதிப் புனல், நம்மவர் என இருவரும் நடித்த படங்களில் அவர்கள் இணை பேசப்பட்டது.

மறுபிரவேசம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இப்போது மீண்டும் பூரண நலத்துடன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் கவுதமிக்கு, சினிமாவில் ஒரு மறுபிரவேசமாக அமையட்டும் என்பதால் கமலும் இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











