வக்கிர புத்திக்காரர்களின் வரமாக மாறிய GROK.. நடிகைகள் போட்டோ போட்டாலே சிக்கல்?.. இவங்களுமா?
சென்னை: உலகம் முழுவதும் எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ GROK மூலமாக ட்விட்டரில் எந்தவொரு பெண்கள் போட்டோ போட்டு புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும், நடிகைகள் புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும் உடனடியாக GROK இந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணை பிகினி உடையில் மாற்றிக் காட்டு என நெட்டிசன்கள் எல்லை மீற, நொடிப் பொழுதில் க்ரோக்கும் அதை ஆலம்பனா நான் உங்கள் அடிமை என செய்து கொடுக்கும் அறிவுக்கெட்ட பூதமாக செய்து கொடுக்கிறது.
நேற்றே மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட தி ராஜா சாப் பட நடிகைகளையும் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோரையும் க்ரோக் மூலமாக பிகினி உடைக்கு மாற்று நெட்டிசன்கள் தங்களது வக்கிர இச்சைகளை தீர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், இன்று நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் வியன்னா என யாருடைய போட்டோ எக்ஸ் தளத்தில் வந்தாலும் நெட்டிசன்கள் க்ரோக் உதவியுடன் பிகினி போட்டோவாக மாற்றி வருகின்றனர்.
சென்சார் வேண்டும்: க்ரோக் எனும் ஏஐ ஆப்ஷனை பொதுமக்களுக்கு எலான் மஸ்க் கொடுத்துள்ள நிலையில், அதை ஆக்கப்பூர்வமாக அறிவை வளர்த்துக் கொள்ளவும் பணம் சம்பாதிக்க உதவும் வகையில் பயன்படுத்த நினைக்காமல் என்டர்டெயின்மென்ட்டாக விளையாடி எல்லை மீறி வருகின்றனர். இதனை யார் கட்டுப்படுத்துவது என்கிற கேள்விகளையும் இளம் பெண்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். நடிகைகளை மட்டுமின்றி பக்கத்து வீட்டுப் பெண் சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டாலும் இப்படித்தான் ஆபாசமாக க்ரோக்கை வைத்து பிகினி போட்டோக்களை உருவாக்கி வருகின்றனர். நோ மீன்ஸ் நோ என்பது போல க்ரோக்கின் இந்த ஆபாச வேலைக்கு எதிராக பிரபலங்கள் குரல் கொடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
மீனாட்சி சவுத்ரி முதல் வியன்னா வரை: மாளவிகா மோகனனை தொடர்ந்து நேற்று வெளியான பல நடிகைகளின் புகைப்படங்களையும் பிகினி போட்டோக்களாக மாற்றி வருகின்றனர். புதிதாக மீனாட்சி சவுத்ரி, பிக் பாஸ் வியன்னாவும் இந்த ஆபாச வலைக்குள் சிக்கியுள்ளனர். க்ரோக்கின் இந்த வக்கிர எடிட் ஆப்ஷனை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், அதன் பின்னர் ஏகப்பட்ட நிர்வாண போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் குவியத் தொடங்கி விடும். சட்டத்தில் எக்ஸ் தளத்தின் க்ரோக்கை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பெரிய அபராதத்தை விதிக்கவும் வழி இருக்கா என்றும் பல இளம் பெண்கள் க்ரோக்கிடமே கேட்டு வருவது தான் இதில் வேடிக்கை. ஹாலிவுட் முதல் கோலிவுட் நடிகைகள் என இந்த மோசமான டிரெண்ட் யாரையுமே விடவில்லை என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் சுய ஒழுக்கத்துடன் இதை தவிர்க்க வேண்டும். அல்லது, இதற்கு எலான் மஸ்க் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பது தான் அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications