பிகினி டார்ச்சர் ஓவர்னு பார்த்தா.. GROK மூலம் நடிகைகளுக்கு அடுத்த தலைவலி.. பாவம் மிருணாள் தாக்கூர்!
சென்னை: ட்விட்டரை வாங்கி எக்ஸ் தளம் என மாற்றி GROK எஐ ஆப்ஷனையும் கையில் கொடுத்து அனுபவி டா தம்பி ராஜான்னு எலான் மஸ்க் இளைஞர்களை உசுப்பி விட, பலரும் க்ரோக்கிடம் நடிகைகளை பிகினி உடையில் காட்டு என்றும் பெண்களை கவர்ச்சியான உடைகளிலும் அரை நிர்வாணமாக காட்டு எனக் கேட்க, அந்த க்ரோக் எனும் மக்கு பூதம் ஆலம்பனா தங்களின் அடிமை என்பது போல அனைத்து நடிகைகளையும் பிகினி உடையில் காட்டத் தொடங்கியது.
அதற்கு கடுமையான எதிர்ப்புகளை நடிகைகள் கிளப்பினர். இந்திய அரசாங்கமும் தொடர்ந்து கடுமையான வலியுறுத்தல்களை கொடுத்த நிலையில், க்ரோக் மூலம் பிகினி உடைக்கு நடிகைகளையோ சாதாரண பெண்களையோ மாற்ற முடியாத சூழல் உருவானது.

மேலும், அதிரடியாக அத்தனை ஆபாச வீடியோக்களையும் எக்ஸ் தளத்தில் இருந்து எலான் மஸ்க் தூக்கினார். ஆனால், தற்போது ஏஐ விட மனித மூளை எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை காட்டும் விதமாக பல இளைஞர்கள் டிரெஸ் ஸ்வாப் மற்றும் பொசிஷன் சேஞ்ச் ஆப்ஷனை பயன்படுத்தி நடிகைகளை இம்சைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆபத்தான ஏஐ: கணினி போல மனிதர்களுக்கு உதவும் ஒரு கருவி தான் ஏஐ என சொல்லப்பட்டாலும், உண்மையில் முதலாளிகளுக்கு மட்டுமே உதவும் கருவியாகவும் தொழிலாளர்களின் வேலைகளை பறிக்கும் மாற்று சக்தியாகவும் மாறி வருகிறது. அதை விட அபாச உலகை கட்டமைக்கவும் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகைகள் ஏற்கனவே சினிமாவிலும் விருது விழாக்களிலும் அவர்கள் சம்மதத்துடன் கவர்ச்சியை காட்டி வருகின்றனர். ஆனால், அவர்களின் அனுமதியின்றி மோசமான சித்தரிப்புகளை ஏஐ உதவியுடன் தொடர்ந்து பல இளைஞர்கள், இளம் பெண்கள், காமுகர்கள் உருவாக்கி வருவது தான் பெரிய பிரச்னையை உருவாக்கி வருகிறது.
அடுத்த தலைவலி: ஆரம்பத்தில், க்ரோக்கிடம் நடிகைகளை பிகினி உடையில் காட்டு என்றால், அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் கண்ட பிகினி உடையில் காட்டி வந்தது. ஆனால், தற்போது அந்த ஆப்ஷன் காசு கொடுத்தால் மட்டுமே செய்யக் கூடிய ஆப்ஷனாக ரெஸ்ட்ரிக்ட் செய்துவிட்டனர். இந்நிலையில், அடுத்த தலைவலியாக பிகினி உடை அல்லது மோசமான கவர்ச்சி ஆடைகளின் போட்டோக்களை காட்டி நடிகைகளின் புகைப்படங்களுடன் அந்த உடையை இந்த நடிகை உடுத்தும் போட்டோக்களை வெளியிடு என க்ரோக்கையே ஏமாற்றி குரூர புத்தியைக் காட்டி வருகின்றனர்.
மேலும், பொசிஷன் போட்டோக்களை ஆபாசமான ஆங்கிளில் காட்டி நடிகைகளை அந்த கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டும் ஏஐ போட்டோக்களை உருவாக்கி விஷம விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்று தான் எண்ணத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











