வரி ஏய்ப்பு... ஹீரோயின் வீட்டில் திடீர் ரெய்டு... நடிகை ஷாக்

By

ஐதராபாத்: நடிகை லாவண்யா திரிபாதி வீட்டில் வரித்துறையினர் நடத்திய திடீர் ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில், சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், லாவண்யா திரிபாதி. அடுத்து சி.வி.குமார் தயாரித்து இயக்கிய மாயவன் படத்தில் நடித்திருந்தார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், அந்தால ராக்‌ஷசி என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து அங்கு நடித்து வரும் அவர், தமிழ், இந்தி மொழிகளிலும் நடித்துவருகிறார்.

நிராகரித்த படங்கள்

நிராகரித்த படங்கள்

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் நிராகரித்த படங்கள் ஹிட்டாகி விட்டால் அதைக் கண்டு வருந்துவதில்லை. என்ன வேண்டும் என்று நினைக்கிறேனோ அதுபோன்ற படங்கள் எனக்கு வருவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் லாவண்யா திரிபாதி, ரூ.30 லட்சம் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வீட்டில் வரித்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை ரெய்டு நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு கேன்சல்

படப்பிடிப்பு கேன்சல்

இதில் கைப்பற்றப்பட்டப் பொருட்கள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. வீட்டில் சோதனை நடந்த போது, நடிகை லாவண்யா படப்பிடிப்பில் இருந்தார். அதை கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சில இடங்களில்

மேலும் சில இடங்களில்

நடிகை ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாவண்யா வீட்டில் மட்டுமல்லாமல், சில பிரபலங்களில் வீடுகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X