ஹன்சிகாவுக்கு அதுக்குள்ள இத்தனை குழந்தைங்களா.. விஜய், உதயநிதி பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகி உள்ள கார்டியன் எனும் ஹாரர் படம் வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. கடைசியாக ஹன்சிகா நடித்து வெளியான மஹா மற்றும் பார்ட்னர் உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை.

மேலும், அவர் கைவசம் தற்போது ரவுடி பேபி, கார்டியன், மேன் மற்றும் காந்தாரி உள்ளிட்ட படங்கள் உள்ளன. மை3 எனும் வெப்சீரிஸிலும் ரோபோவாக வித்தியாசமாக நடித்திருந்தார் ஹன்சிகா. அந்த வெப்சீரிஸும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

Guardian actress Hansika recently reveals about her 31 kids and talks about Vijay

சினிமாவில் ஹன்சிகா: குழந்தை நட்சத்திரமாக இருந்த ஹன்சிகா 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுத்ரு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 2011ம் ஆண்டு தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை மற்றும் ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். விஜய்யுடன் வேலாயுதம், புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும் நடித்த ஹன்சிகா சிம்புவுடன் வாலு மற்றும் மஹா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் தயாரிப்பில் உருவாகி உள்ள கார்டியன் படத்தில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார்.

தோழியின் கணவருடன் திருமணம்: கடந்த 2022ம் ஆண்டு ஹன்சிகாவின் திருமணம் நடைபெற்றது. சோஹைல் கத்தூரியா எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே ஹன்சிகாவின் தோழியை மணந்தவர் தான் அந்த சோஹைல் என்கிற தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை பற்றியெல்லாம் தனது திருமண வீடியோவில் ஹன்சிகா பேசியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

Guardian actress Hansika recently reveals about her 31 kids and talks about Vijay

31 குழந்தைகள்: நடிகை ஹன்சிகா சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனதில் இருந்தே அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் அடிக்கடி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார். தற்போது 31 குழந்தைகளை தத்தெடுத்து அவர் வளர்த்து வருகிறாராம். உண்மையாகவே பப்ளிசிட்டி இல்லாமல் பல நல்ல காரியங்களை செய்யும் நல்ல மனசுக்கு சொந்தக்காரி ஹன்சிகா தான் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜய், உதயநிதி பற்றி: விஜய் மற்றும் உதயநிதியின் அரசியல் குறித்து ஹன்சிகாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இருவருமே தங்கள் துறையில் சிறப்பானவர்கள் என்றார். மேலும், இந்த நடிகருடன் ஒரு செயலை செய்ய விரும்புகிறேன் என்றால் யாருடன் என்ன செய்வீர்கள் என உதயநிதி பெயரை சொல்லி கேட்க, அவருடன் மரக்கன்றுகளை நடுவது பிடிக்கும் என்றார். மேலும், ஜெயம் ரவியுடன் பார்ட்டி பண்ணால் சிறப்பாக இருக்கும் என்றார். நடிகைகளில் காஜல் அகர்வால் தான் ஃபேவரைட் என்றார்.

விஜய் ரொம்ப சென்சிபிள்: நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து எல்லாம் நான் கமெண்ட் பண்ண விரும்பவில்லை. ஆனால், அவர் ரொம்பவே சென்சிபிள். அவரது அரசியல் வருகைக்கு எனது வாழ்த்துக்கள். அவருடன் 2 படங்களில் நடித்துள்ளேன். அவருடன் நடிக்கவில்லை என்றாலும், அவர் திரையில் தோன்றினாலே வாயை பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பேன். அந்தளவுக்கு அவர் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் போட்டு நடிப்பார் எனக் கூறியுள்ளார். ஹன்சிகா நடித்துள்ள ஹாரர் படமான கார்டியன் வரும் மார்ச் 8ம் தேதி ஊர்வசியின் ஜே பேபி படத்துடன் போட்டியாக வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X