»   »  இந்த நடிகை யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

இந்த நடிகை யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் நடிகை மீனாக்ஷி சேஷாத்ரியை அவருடன் நடித்த நடிகர் ரிஷி கபூருக்கே அடையாளம் தெரியவில்லையாம்.

பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடுகட்டிப் பறந்தவர் நடிகை மீனாக்ஷி சேஷாத்ரி. நடிப்பு மட்டும் அல்ல அவர் அருமையாக நடனமும் ஆடுவார். தமிழில் பிரபு, ரமேஷ் அரவிந்த் நடித்த டூயட் படத்தில் ஹீரோயினாக வந்தாரே அவர் தான் மீனாக்ஷி சேஷாத்ரி.

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்காவில் கணவருடன் செட்டில் ஆகிவிட்டார்.

ரிஷி கபூர்

ரிஷி கபூர்

அமெரிக்காவில் நடனப் பள்ளி நடத்தி வரும் மீனாக்ஷி எப்பொழுது எல்லாம் இந்தியா வருகிறாரோ அப்பொழுது எல்லாம் தன்னுடன் நடித்த நடிகர் ரிஷி கபூரை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தெரிகிறதா

தன்னுடன் தாமினி உள்ளிட்ட படங்களில் நடித்த மீனாக்ஷி தன்னை சந்திக்க வந்தபோது அவருடன் சேர்ந்து ரிஷி கபூர் புகைப்படம் எடுத்தார். அதை ட்விட்டிரில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, இது யார் என்று தெரிகிறதா? அவரை பார்த்தபோது எனக்கே ஒரு நொடி அடையாளம் தெரியவில்லை. என்ன ஒரு இன்ப அதிர்ச்சி. பெயரை 30 நிமிடங்களில் தெரிவிக்கிறேன் என்றார். அவர் ட்வீட்டை பார்த்து பலர் அந்த நடிகை யார் என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.

மீனாக்ஷி

99 சதவீதம் பேர் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள். அது மீனாக்ஷி சோஷாத்ரி. அவர் எப்பொழுது மும்பை வந்தாலும் எங்களை சந்திப்பார். அழகாக இருக்கிறார்! என ட்வீட் செய்துள்ளார் ரிஷி.

அமெரிக்கா

தாமினி, எம்.எஸ்., அமெரிக்காவின் டல்லாஸில் கணவர் ஹரிஷ் மைசூர், மகள், மகனுடன் சந்தோஷமாக வசித்து வருகிறார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரிஷி. மீனாக்ஷிக்கு மீண்டும் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former actress Meenakshi Seshadri visited actor Rishi Kapoor in Mumbai. Kapoor was not able to recognise her for a moment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil