குணா பட ஹீரோயின் ரோஷினி யாரு தெரியுமா?.. ஜோதிகாவோட சொந்த அக்காவா?.. உண்மை என்ன?

சென்னை: அபிராமி அபிராமி என ட்ரோல் செய்ய மட்டுமே குணா படம் உதவி வந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் அசுர வெற்றி குணா படத்தை பற்றிய பல கதைகளை அலசி ஆராய உதவியாக மாறியிருக்கிறது. "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது" என கமல்ஹாசன் இளையராஜா இசையில் பாடி நடித்த காட்சிகள் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ரோஷினி யார் என்றும் குணா படத்துக்கு பிறகு அவர் ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது.

நடிகை ஜோதிகாவுக்கும் ரோஷினிக்கும் இப்படியொரு உறவு இருக்கிறதா என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு இருவரும் அக்கா, தங்கை என்றும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது இல்லை என்பது குறித்தும் ஜோதிகாவின் அக்கா யார் என்பது குறித்தும் குணா ஹீரோயின் யார் என்பது குறித்தும் தெளிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க..

Guna movie heroine Roshini is Jyotika s sister here is the truth

நக்மா பார்த்த வேலை: ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரியே நக்மா தான் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், நக்மா ஜோதிகாவின் ஒன்று விட்ட சகோதரி தான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மா ஜோதிகாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக தனது சகோதரி ரோஷினியை தான் தமிழில் அறிமுகம் செய்தார்.

கார்த்தி படத்தில் அறிமுகம்: ஜோதிகாவின் அக்கா ரோஷினி 1997ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிஷ்யா படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு படங்களிலும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்த ரோஷினி அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை. திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தை கவனித்து வருகிறார்.

Guna movie heroine Roshini is Jyotika s sister here is the truth

குணா ரோஷினி யார்?: ஆனால், ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா தான் கமல்ஹாசனுக்கு ஜோடியாக குணா படத்தில் நடித்த ரோஷினி என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விக்கிபீடியாவில் இடம்பெற்ற போலியான தகவலை பார்த்து பதிவிட்டு வருகின்றனர். கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா மூலம் அறிமுகமானவர் தான் குணா படத்தில் நடித்த ரோஷினி என்றும் அதன் பின்னர் மும்பை சென்ற அவர் என்ன ஆனார்? எங்கே சென்றார் என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை என குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதியே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு: குணா படத்தில் அபிராமி அபிராமி என கமல்ஹாசனை போல அந்த படத்தை பார்த்து விட்டு சினிமா பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் பலரும் அந்த நடிகையை அப்படி கொண்டாடினார்கள். ஆனால், அதன் பின்னர் அவர் யாரிடம் சிக்காமல் சினிமாவை விட்டு விலக காரணமே கமல்ஹாசன் கொடுத்த லவ் டார்ச்சர் தான் என பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் குற்றச்சாட்டுகளை அடுக்கியதும் குறிப்பிடத்தக்கது. மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் விரைவில் 100 கோடி வசூல் ஈட்ட உள்ள நிலையில், குணா படம் பற்றிய பல விஷயங்கள் வெளி வரத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X