விஜய் சேதுபதி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அழகான தங்கை!
சென்னை: ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ , விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் இவர்.

இந்நிலையில், இவரது தங்கை பவானி ஸ்ரீயும் தற்போது சினிமா நடிகையாகி இருக்கிறார். விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.
நேற்று முன் தினம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. விருமாண்டி இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பவானி நடிக்க இருக்கிறார். படத்தில் அவருக்கு சுவாரஸ்யமான கதாபாத்திரம் என படக்குழு தெரிவித்துள்ளது.
பவானி ஏற்கனவே அமலா நாகர்ஜுனாவுடன் இணைந்து 'High Priestess' என்ற வெப் சிரீஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பவானிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











