ஜி.வி.பிரகாஷின் தங்கை செய்த காரியம்... ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல .. அதுக்குள்ள இது எல்லாம் தேவையா!

சென்னை : நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ இப்பொழுது நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

இவர் லீட் ரோலில் நடிக்க உள்ள திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இப்போது கடற்கரையில் காத்து வாங்கியவாறு செம கவர்ச்சியில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

பவானி ஸ்ரீ நடித்து வரும் முதல் திரைப்படமே இன்னும் வெளியாகாத நிலையில் இந்த பீச் போட்டோஷூட் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஒரு சிலர் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல அதுக்குள்ள இவ்ளோ கவர்ச்சியா என வாய்பிளந்துள்ளனர்.

குருதியை கொப்பளிக்க

குருதியை கொப்பளிக்க

மயக்கம் என்ன, ஆடுகளம், அசுரன், தலைவா உள்ளிட்ட பல படங்களில் தனது இசையின் மூலம் ரசிகர்களை மயங்க வைத்ததோடு, அசுரன் திரைப்படத்தில் இவர் போட்ட பிஜிஎம் அனைவரின் குருதியையும் கொப்பளிக்க வைத்துள்ளது.

வாங்கண்ணா வணக்கங்கண்ணா

வாங்கண்ணா வணக்கங்கண்ணா

இசையமைப்பாளராக ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த ஜிவி பிரகாஷ்குமார் "டார்லிங்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். எனினும் இவர் இதற்கு முன்பே விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா" பாடலுக்கு இடையில் ஒரு காட்சியில் வந்து ஆடிச் செல்வார்.

தங்கையும் சினிமாவில் என்ட்ரி

தங்கையும் சினிமாவில் என்ட்ரி

டார்லிங் திரைப்படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் முழு மூச்சுடன் நடிப்பில் தீவிரமாக இறங்கி பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவரது தங்கையும் இப்பொழுது சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அமலா அக்கினி

அமலா அக்கினி

ஓரிரு மாதங்களுக்கு ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்து இருக்கும் கா பெ ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் அதே சமயம் நடிகை அமலா அக்கினி நடித்துவரும் ஒருவர் வெப் சீரிஸ்லும் இவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

லீட் ரோலில்

லீட் ரோலில்

இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்த ஆனந்த் இயக்குனராக அறிமுகமாக உள்ள "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற திரைப்படத்தில் இவர் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

மற்றுமொரு ஷாக்

மற்றுமொரு ஷாக்

இவ்வாறு கோலிவுட்டில் அடுத்தடுத்து தனது அறிமுகத்தை கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க இருக்கும் பவானி ஸ்ரீ இப்பொழுது பீச்சில் செம கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஷாக் கொடுத்துள்ளார்.

இப்பவே கவர்ச்சியா

இப்பவே கவர்ச்சியா

யாருமில்லாத கடற்கரையில் நாற்காலி போட்டு அமர்ந்து முக்கால் கால் வரை தெரிய உட்கார்ந்து கொண்டுள்ள பவானி ஸ்ரீ-யின் இந்த ஹாட்டான போட்டோசூட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாய்பிளந்து ரசித்து வரும் நிலையில், சிலர் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல அதுக்குள்ள இவ்ளோ கவர்ச்சியா என கூறியவாறு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X