Kushboo: 9 மணி நேரம்.. குஷ்புவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை.. யார் இதை செய்தது?
சென்னை: 90ஸ் கிட்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் கனவுக்கன்னியாகவும் வலம் வந்த நடிகை தற்போது ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இவருக்காக தமிழக ரசிகர்கள் கோயிலையே கட்டியுள்ளனர், இந்த பிரச்னையை தீர்க்கமாட்டார்களா என குரல்கள் எழுந்துள்ளன. அரசியலில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையை கண்டு ரசிகர்கள் என்ன ஆ்சசு என பதற்றத்துடன் கேட்க தொடங்கியுள்ளனர்.
வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் குஷ்பு. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபு, சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், கமல், ரஜினி, ராம்கி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் லீட் ரோல்களில் சீரியலில் நடித்து தனி இடத்தை பிடித்துள்ளார் குஷ்பு. பின்பு, திமுக, காங்கிரஸ் என அரசியலிலும் காலடி எடுத்து வைத்து முன்னேறியுள்ளார். தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார் குஷ்பு.

எதுவும் அமையவில்லை: அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவிற்கு பிரேக் காெடுத்த குஷ்பு மீண்டும் சினிமாவில் நடிக்க கதைகளை கேட்டு வந்துள்ளார். ஆனால், அவருக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் ஏதும் அமையவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அரசியலில் இருந்துகொண்டே படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது கேங்கர்ஸ், மூக்குத்தி அம்மன் படங்களை தயாரித்துள்ளார். மேலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது குடும்பத்துடன் அல்லது தனியாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
20 கிலோ குறைத்த குஷ்பு: இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், தனது 20 கிலோ எடையை குறைத்த குஷ்பு உடல் தோற்றத்தை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதைப் பார்த்து நெட்டிசன்களே சற்று குழம்பி போனார்கள். இது 90களை கவர்ந்த சின்னதம்பி குஷ்புவா அல்லது அவரது மகளா என வியந்து பார்த்தனர். இந்த வயதிலும் அவருக்கு இருக்கும் சினிமா மீதான காதலை புரிந்துகொள்ள முடிகிறது எனவும் தெரிவித்தனர். மேலும், இன்றைய இளையதலைமுறையுடன் போட்டி போட தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதேபோன்று குஷ்புவும் எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தளம்: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்புவிற்கே ஹேக்கர்ஸ் ஷாக் கொடுத்துள்ளனர். கடந்த 9 மணி நேரமாக குஷ்புவின் எக்ஸ் தளம் முடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஹேக்கர்ஸ் தனது எக்ஸ் தள மின்னஞ்சலை மாற்றியுள்ளதாகவும், அதனை மீட்க புகார் அளித்திருப்பதாகவும் குஷ்பு தெரிவித்திருக்கிறார். எக்ஸ் தளத்தை மீட்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படம் மற்றும் பிற செய்திகளை பகிர முடியவில்லை. விரைவில் மீண்டு வருவேன். இந்த பிரச்னை தீர்க்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
பிரபலங்கள் தவிப்பு: சமீபகாலமாக சினிமா பிரபலங்களின சமூகவலைதளங்களை ஹேக்கர்கள் முடக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால், பல பிரச்னைகளை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அண்மையில் பாடகி ஸ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் இமான், நடிகை ஸ்ருதி நாராயணன் என பலரும் இந்த பிரச்னையில் சிக்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். தற்போது அதேபோன்ற நிலைக்கு குஷ்பு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











