ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி விஞ்ஞானியாக நடிக்கும் புதிய படம்... பூஜையுடன் துவங்கியது!

சென்னை: நடிகை ஹன்சிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள மகா திரைப்படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது

105 மினிட்ஸ் மற்றும் மை நேம் இஸ் ஸ்ருதி ஆகிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி இளம் விஞ்ஞானியாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவிற்கு மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே என அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக உள்ளார். ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகியுள்ள மகா படத்தை இயக்குனர் ஜமீல் இயக்கி உள்ளார். முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் ஹன்சிகா நடித்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு ஹன்சிகா உடன் இணைந்து இந்த படத்தில் நடித்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. மிக விரைவிலேயே இப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் ஆர் கண்ணன்

இயக்குனர் ஆர் கண்ணன்

தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை முயற்சிக்காத வகையில் 105 நிமிடங்கள் இடைவிடாமல் ஹன்சிகா நடித்துவரும் திரைப்படத்திற்கு 105 மினிட்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மை நேம் இஸ் ஸ்ருதி என்ற படத்திலும் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி அடுத்ததாக இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம் கொண்டான்,கண்டேன் காதலை, சேட்டை,இவன் தந்திரன், பூமராங் மற்றும் சமீபத்தில் வெளியான தள்ளி போகாதே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் ஆர் கண்ணன்.

ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில்

ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில்

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தான் இயக்கும் திரைப் படங்களை தயாரித்தும் வருகிறார். இப்பொழுது மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரோலில் நடித்து வருகிறார். தி கிரேட் இந்தியன் கிச்சன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதையடுத்து மிர்ச்சி சிவா, யோகி பாபு,கருணாகரன் பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் காசேதான் கடவுளடா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.இந்த நிலையில் ஆர் கண்ணன் அடுத்ததாக இயக்கி தயாரிக்கும் புதிய படத்தில் ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடிக்கிறார்.

Recommended Video

Celebrities Airport Videos | Celebrities Spotted | Tamil Filmibeat
இளம் விஞ்ஞானியாக

இளம் விஞ்ஞானியாக

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் வரும் ஆர் கண்ணன் இந்த முறை சயின்ஸ் பிக்சன் கலந்த ஹாரர் திரில்லர் காமெடி கதை களத்தில் அனைவருக்கும் பிடிக்கும் காமெடி படமாக இப்படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் இளம் விஞ்ஞானியாக நடிக்க உள்ளார். அதற்காக சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் செலவில் அமைக்கிறார்கள்.

ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனத்துடன் ஃபோக்கஸ் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது. ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம் செய்கிறார்.

சித்தார்த் சுபாவெங்கட் வசனம் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஆகஸ்ட் 15-ல் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X