அடுத்தடுத்து ஹிட்ஸ்... கோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி ஹன்சிகா!
கோலிவுட்டின் டாப் நாயகியாகிவிட்டார் ஹன்சிகா. காரணம் அவர் நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதுதான்.
தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய இரு படங்களும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக சிங்கம் 2 இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ராசியில்லாத நடிகை
ஹன்சிகா தமிழில் அறிமுகமான படம் மாப்பிள்ளை. அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அவர் நடித்த அடுத்த படமான எங்கேயும் காதலும் தோல்வியைத் தழுவியது. இதனால் அவரை ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்த ஆரம்பித்தனர்.

வேலாயுதம்
ஹன்சிகா நடித்த முதல் வெற்றிப் படம் என்றால் அது விஜய்யுடன் நடித்த வேலாயுதம். இந்த வெற்றிதான் அவரை கோடம்பாக்கத்திலிருந்து விரட்டாமல் பார்த்துக் கொண்டது.

ஓகே ஓகே
அவர் அடுத்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி பெரிய வெற்றிப் படமாக, ஹன்சிகா தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார். ஆனால் அடுத்து வந்த சேட்டையில் கோட்டைவிட்டார்.

சிங்கம் 2
அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்துவிட்டது சிங்கம் 2. சூர்யாவைக் காதலிக்கும் பள்ளி மாணவி என்ற பொருந்தாத வேடத்தில் அவர் வந்தாலும், அதையும் ரசித்து வெற்றியைத் தந்துள்ளனர் ரசிகர்கள்.

பிரியாணி
அடுத்து பிரியாணி, வாலு, வேட்டை மன்னன், மான் கராத்தே ஆகிய தமிழ்ப் படங்களிலும், மூன்று தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

நம்பர் ஒன்
நம்பர் ஒன் என்ற எண் விளையாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை என்று நடிகைகள் என்னதான் சொன்னாலும், உள்ளூர அந்த முதலிடத்தை விரும்பவே செய்கிறார்கள். அடுத்தடுத்த வெற்றிகளே அந்த இடத்தைத் தீர்மானிக்கின்றன.அந்த வகையில் ஹன்சிகாதான் இன்றைக்கு தமிழில் நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்கிறார்.


Click it and Unblock the Notifications











