»   »  தத்துக் குழந்தைகளுக்கு வீடு கட்ட ஹன்சிகா திட்டம்... மும்பை அருகே இடம் ரெடி!

தத்துக் குழந்தைகளுக்கு வீடு கட்ட ஹன்சிகா திட்டம்... மும்பை அருகே இடம் ரெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஹன்சிகா தான் தத்தெடுத்துள்ள குழந்தைகளுக்காக வீடு கட்ட, மும்பை அருகே நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.

சிறந்த நடிகையாக மட்டுமின்றி, சமூகசேவை செய்பவராகவும் அடையாளம் காணப்படப் பட்டுள்ளவர் ஹன்சிகா. தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஏழை குழந்தைகளை தத்தெடுப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படியாக இதுவரை அவர் 25 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.

தத்துக் குழந்தைகள்...

தத்துக் குழந்தைகள்...

தனது தத்துக் குழந்தைகளுக்கு உணவு, உடை, தங்குமிடம், படிப்பு செலவு எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொள்ளும் ஹன்சிகா, அதற்கென தனது சம்பளத்தில் பெரும் பகுதியை செலவிட்டு வருகிறார்.

தனி வீடு...

தனி வீடு...

இந்நிலையில், ஹன்சிகாவுக்கு தனது தத்துக் குழந்தைகள் தங்குவதற்கு தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாம். இது தற்போது நிறைவேறப் போகிறது.

அழகான, அமைதியான இடம்...

அழகான, அமைதியான இடம்...

சமீபத்தில் மும்பை அருகே வாடா என்ற இடத்தில் நிலம் ஒன்று வாங்கியிருக்கிறார் ஹன்சிகா. மிகவும் அழகாவும், அமைதியாகவும் அமைந்துள்ள அந்த இடத்தில் கூடிய சீக்கிரத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்க உள்ளாராம் ஹன்ஸ்.

ஹன்சிகாவின் திட்டம்...

ஹன்சிகாவின் திட்டம்...

கட்டிடம் தயாரானதும் அதில், தான் தத்தெடுத்துள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் வயதானவர்களை தங்க வைக்க ஹன்சிகா திட்டமிட்டுள்ளாராம்.

English summary
Hansika has acquired an acre of land on the outskirts of Mumbai. The actress is planning to construct a home to shelter elderly persons and adopted children.
Please Wait while comments are loading...