ஹன்சிகா பிறந்த நாள்: போன வருஷம் சிம்புவுடன்... இந்த வருஷம் அம்மாவுடன்!

By Shankar

கடந்த ஆண்டு தன் காதலன் சிம்புவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை ஹன்சிகா, இந்த ஆண்டு தன் அம்மாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகையானவர் ஹன்சிகா. இத்தனைக்கும் இவர் நடித்த முதல் இரு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் புஸ்வானமானவைதான்.

ஆனால் ஒருவழியாக முன்னணி கதாநாயகன்களின் படங்களில் இடம் பெற்றார். இன்று முன்னணி நாயகியாகவும் வலம் வருகிறார்.

சிம்புவுடன்..

சிம்புவுடன்..

சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் ஹன்சிகா. அப்போதே, இது நிச்சயம் காதலில் வந்து நிற்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதே போல ஒருவரையொருவர் காதலிப்பதாக சிம்புவும் ஹன்சிகாவும் ட்விட்டரில் செய்தி வெளியிட்டனர்.

முறிவு

முறிவு

ஆனால் அந்த உறவு ஆறு மாதங்கள் கூட நிலைக்காது என்று மீடியாக்களில் எழுத ஆரம்பித்தனர். அப்படியேதான் நடந்தது. ஒரு நாள் திடீரென நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என அறிவித்தார் சிம்பு. இந்தப் பிரிவுக்குக் காரணம் சிம்பு, தன் பழைய காதலி நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்ததுதான் என்றார்கள்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

கடந்த ஆண்டு இதே நாளில் ஹன்சிகா தன் பிறந்த நாளை முன்னாள் காதலன் சிம்புவுடன் கொண்டாடி மகிழ்ந்தார். நாளை என் டார்லிங் பிறந்த நாள்.. என்ன கிப்ட் தர்றதுன்னு தெரியலியே என்று சமூக வலைத்தளங்களில் காதல் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் சிம்பு. அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்ட காட்சிகளை வெளியிட்டனர்.

அம்மாவுடன்

அம்மாவுடன்

இந்த ஆண்டு நிலைமை தலைகீழ் மாற்றம். ஹன்சிகா தன் பிறந்த நாளை தன் அம்மா மோனா மோத்வானியுடன் சேர்ந்து கேக் கொண்டாடிய படங்களை மீடியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X