ராஸ்கலில் விக்ரம் ஜோடியான ஹன்சிகா: கவலையில் த்ரிஷா

By Siva

சென்னை: ராஸ்கல் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஹன்சிகாவை தேர்வு செய்துள்ளனர். இதனால் இந்த வாய்ப்பை எதிர்பார்த்த த்ரிஷா வருத்தம் அடைந்துள்ளார்.

விக்ரம் ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தில் நடித்து வந்தார். படத்தை வெளியிடும் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்காக விக்ரம் தனது எடையை வெகுவாக குறைத்து குச்சியாக ஆனார்.

உடல் எடையை குறைத்து கூட்டுவது ஒன்றும் அவருக்கு புதிதன்று.

ஐ

ஐ படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறார் விக்ரம். முன்னதாக விக்ரம், ஷங்கர் கூட்டணி சேர்ந்த அந்நியன் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

தரணி

தரணி

தன்னை வைத்து தில், தூள் ஆகிய வெற்றிப் படங்களை அளித்த இயக்குனர் தரணியின் படத்தில் அடுத்ததாக விக்ரம் நடிக்கிறார்.

ஹன்சிகா, த்ரிஷா

ஹன்சிகா, த்ரிஷா

விக்ரம், தரணி மூன்றாவது முறையாக சேரும் படத்திற்கு ராஸ்கல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹன்சிகா அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்டனர்.

ஹன்சிகா

ஹன்சிகா

இறுதியில் ராஸ்கல் பட நாயகியாக ஹன்சிகா தேர்வாகியுள்ளார். இதனால் ஹன்சிகா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

சாமி, பீமா என்று ஏற்கனவே விக்ரமுடன் இரண்டு படங்களில் நடித்த த்ரிஷாவுக்கு மூன்றாவது முறையாக சீயானுடன் ஜோடி சேரும் ஆசை இருந்தது. ஆனால் தற்போது அந்த ஆசை நிராசையாக ஆகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X