தெலுங்கு நடிகர் சித்தார்த்தை காதலிக்கவில்லை! - ஹன்சிகா

By Shankar

சென்னை: ஜெயப்பிரதா உறவினரும் தெலுங்கு நடிகருமான சித்தார்த்தை தான் காதலிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

உயிரே உயிரே என்ற தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா.

சித்தார்த் வேறு யாருமல்ல, பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் நெருங்கிய உறவினர்.

இந்தப் படத்தில் நடிக்கும்போது சித்தார்த்துக்கும் ஹன்சிகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதால்தான், சிம்பு கோபித்துக் கொண்டார் என்று கொளுத்திப் போட்டவர்களும் உண்டு.

Hansika denies affair with Sidhardh

இதுகுறித்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "சித்தார்த்தை நான் காதலிப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.

இது முழுக்க வதந்தி. சித்தார்த் என்னுடன் நடிப்பவர் என்பதோடு எங்கள் தொடர்பு நின்றுவிட்டது. அந்தப் படப்பிடிப்பு கூட பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பிறகு எனக்கும், சித்தார்த்துக்கும் தொடர்பே இல்லை.

நான் தற்போது ஒன்பது படங்களில் நடித்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்கள் முழுக்க, சினிமாவில்தான் கவனம் செலுத்துவேன். காதலிப்பதற்கு எனக்கு ஏது நேரம்?", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X