2 ஆண்டுகளில் 9 தடவை கொடுத்தேன்.. வீணடித்துவிட்டனர்! - ஹன்சிகா புகார்

By Shankar

சென்னை: வாலு படத்துக்காக நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டு என்மேல் வீண்பழி சுமத்துகின்றனர் என்று ஹன்சிகா குற்றம்சாட்டினர்.

சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். விஜய் சந்தர் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளது.

Hansika denies Vaalu producer's allegation

இந்த பாடல் காட்சியில் நடித்து கொடுக்க ஹன்சிகா மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 'வாலு' படத்தில் நடித்தபோதுதான் சிம்பு- ஹன்சிகா இடையே காதல் மலர்ந்தது. பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இதனால்தான் சிம்புவுடன் பாடல் காட்சியில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

புகார்

'வாலு' படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு ரூ. 70 லட்சம் சம்பளம் பேசப்பட்டது என்றும் அதில் 55 லட்சத்தை கொடுத்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி ரூ. 15 லட்சத்தை தந்து விடுவதாக கூறினேன். ஆனால் ஹன்சிகா கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் நான் பெரிய நஷ்டத்துக்கு உள்ளானேன். ஹன்சிகாவின் கால்ஷிட்டை பெற்று தரும்படி வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஹன்சிகா மறுப்பு

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த புகாருக்கு ஹன்சிகா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனது கால்ஷீட்டுகளை வீணடித்துவிட்டு, தன் மீதே பழி போடுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் ஹன்சிகா.

வீணடிப்பு

இதுகுறித்து ஹன்சிகாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "வாலு' படத்தில் பாடல் காட்சியை முடித்து கொடுக்க பல தடவை கால்சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பை நடத்தாமல் அந்த தேதிகளை வீணடித்து விட்டனர். ஹன்சிகா தற்போது வேறு படங்களில் நடித்து வருகிறார். வாலு பட தயாரிப்பாளருக்கு அவசரமாக கால்ஷீட் வேண்டுமென்றால் ஹன்சிகா நடிக்கும் மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம்தான் அவர் கேட்க வேண்டும்.

2 வருடங்களில் 9 தடவை...

வாலு படத்துக்காக 2 வருடங்களில் ஒன்பது தடவை ஹன்சிகா கால்சீட் கொடுத்துள்ளார். அதனை அவர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். எல்லா படங்களையும் ஹன்சிகா சமமாகவே கருதுகிறார்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X