குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாடிய குட்டி குஷ்பு.. கம் பேக் ஹன்சிகா!

சென்னை : ஆடுகளம் திரைப்படத்தில் ஒரு பாடலில் ' உண்ண வெள்ளாவியில் வச்சு வெளுதாங்களா இல்ல வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா ' என்ற பாடல் வரிகள் யாருக்கு பொருத்தம் ஆகுதோ இல்லையோ நம்ம ஹன்சிகாவுக்கு பக்காவாக பொருந்தும்.

ப்பா ... என்ன கலரு டா என்று பார்ப்பவர்களை மயக்கும் அளவிற்கு சும்மா தங்க சிலை போல் ஜொலிக்கும் நமது ஹன்சிகாவுக்கு குட்டி குஷ்பு என்று செல்லப் பெயரும் உண்டு காரணம் சின்ன வயசு குஷ்பு போலவும் அமுல் பேபி போலவும் தலுக் முலுக்கு என்று தக்காளி பழம் போலவும் இருக்கும் நமது ஹன்சிகா கோலிவுட்டின் பொக்கிஷம் என்று சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் தனது அழகான கள்ள சிரிப்பால் ரசிகர்களை தன் வசம் இழுத்த நடிகை ஹன்சிகா கோலிவுட்டின் அமுல் பேபி .ஹன்சிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார்

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

2011 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தில் அறிமுகமானார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார் ஹன்சிகா
பின்பு பல திரைப்படங்கள் ஹன்சிகாவுக்காக காத்திருந்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் அடுத்தடுத்து அறிமுகமான ஹன்சிகா மார்க்கெட்டிலும் ரசிகர் மனதிலும் இடம் பிடித்தார்

கோலிவுட்டின் குட்டி குஷ்பு

கோலிவுட்டின் குட்டி குஷ்பு

கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் உடற்பயிற்சி செய்து டயட் மெயின்டெயின் செய்து தனது உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்கும் நிலையில் ஹன்சிகா பேபி அதை முற்றிலும் மாற்றி அமைத்தார் என்னதான் குண்டாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் மனதில் தலுக் மொலுக் பேபி ஹன்சிகா என்று பெயர் வந்தது பின்னர் நடிகரும் இயக்குனருமான சுந்தரி.சி யின் தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை , போன்ற படங்களில் நடித்த ஹன்சிகாவுக்கு குட்டி குஷ்பு என்ற பெயரும் கிடைத்ததற்கு காரணம் சின்ன தம்பி திரைப்படத்தில் வந்த குஷ்பு போல இருந்ததே.

கலக்கிய செல்ல குட்டி

கலக்கிய செல்ல குட்டி

ஹன்சிகாவுக்கு கோலிவுட்டில் பல ரசிகர்கள் உருவான நிலையிலும் தெலுங்கு சினிமாவில் நடித்து அங்கு இருக்கும் சினிமா ரசிகர்களையும் தனது அழகால் மயக்கி தன்வசம் இழுத்துக் கொண்ட ஹன்சிகா பேபி பின்னர் மலையாளத் துறையிலும் தன் கை வரிசையை காட்டினார் அதன்பின்னர் கன்னடத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹன்சிகா பின்னர் ஹிந்தியிலும் கால்தடம் பதித்தார் என்னதான் பல மொழிகளில் சாதனை செய்து வந்தாலும் ஹன்சிகா தமிழ் ரசிகர்களுக்கு என்றும் குறை வைத்ததில்லை அழகான தோற்றம், புடவை கட்டினால் குத்துவிளக்கு, மாடர்ன் டிரஸ் போட்டால் ஹாட் பேபி என்று எல்லாவித ரசிகர்களையும் கவர்ந்து வந்த ஹன்சிகா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பையும் கொடுத்தார்.

காணாமல் போன ஹன்சிகா

காணாமல் போன ஹன்சிகா

தமிழில் முன்னணி நடிகராக இருந்த சிம்பு. பல பிரச்சனைகளை கடந்து தற்போது மீண்டும் சினிமா துறையில் வந்திருக்கும் நிலையில் அவருடன் நடித்த வாலு என்ற திரைப்படத்தில் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் கிசுகிசு என்று கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுத்தது .பின்னர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர்கள். அவர்கள் வேலையை சரியாக பார்க்கவில்லை படவாய்ப்பு கம்மியான நிலையில் ஹன்சிகா தன் எடையை குறைக்கப் போவதாக உடற் பயிற்சி செய்து வந்த போது தேவையில்லாத வேலை என்று பல ரசிகர்கள் விமர்சித்தார்கள் தற்போது நமது ஹன்சிகா ஒல்லியான நிலையில் எங்களுக்கு பழைய ஹன்சிகா தான் வேண்டும் என்று பல ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் ரசிகர்கள்

ஹன்சிகாவுக்கு ஒரு காலத்தில் இருந்த ரசிகர் பட்டாளம் தற்போது குறைந்தது என்பது உண்மையே காரணம் முன்னொரு காலத்தில் கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்த ஹன்சிகா தற்போது பட வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று வலம் வருகிறார் .தமிழில் மகா என்ற திரைப்படத்தில் சிம்புவோடு சேர்ந்து நடிப்பதாக வந்த தகவல் அதன்பிறகு பல மாதங்கள் வருடங்கள் கடந்தும் அந்த படத்தை பற்றி எந்தவித செய்தி ஏதும் கிடைக்காததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் . ஹன்சிகா தனது அன்றாட வாழ்க்கையை அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம் அவ்வபோது தனது நண்பர்களுடன் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ஹன்சிகா அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த நிலையில் பல ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர் ஒரு சில ரசிகர்கள் மட்டும் எப்போ கம் பேக் கொடுப்பீங்க மேடம் என்று விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X