விஜய், அஜீத்துடன் நடித்தே ஆகணும்: ஹன்சிகா தீவிர முயற்சி
சென்னை: தனது மார்க்கெட் சரியத் துவங்கியுள்ளதால் ஹன்சிகா விஜய், அஜீத் படங்களில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்.
ஹன்சிகா விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்த பிறகு தான் மளமளவென வாய்ப்புகள் வந்து குவிந்தன. அதன் பிறகு தான் அவருக்கு சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது ஹன்சிகா கையில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் எதுவும் இல்லை. தனது மார்க்கெட் சரியத் துவங்கியுள்ளதை அவர் உணர்ந்துவிட்டார்.

லக்ஷ்மி மேனன்
லக்ஷ்மி மேனனின் அசுர வளர்ச்சியைக் கண்டு ஆடிபோயுள்ள ஹன்சிகா தெலுங்கிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இதில் அவருக்கு சரியான போட்டியாக நஸ்ரியா நஸீம் இருப்பார் என்று வேறு கூறப்படுவதால் அவர் சற்று கலங்கித் தான் உள்ளார்.

காஜல் ஓவர்டேக் பண்ணிடுவாரா?
விஜய்யுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான், மீண்டும் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் காஜல் தன்னை ஓவர்டேக் செய்துவிடுவாரோ என்று பயப்படுகிறாராம் ஹன்சிகா.

விஜய், அஜீத்
முன்னணி நடிகர்கள் படத்தை கைப்பற்றிவிட்டால் காஜலைப் பற்றி பயப்பட வேண்டாம் என்று ஹன்சிகாவுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளார்களாம். அதனால் அவர் விஜய், அஜீத் படங்களில் நடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











