ஹன்சிகாவுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு: 24வது குழந்தையை தத்தெடுப்பு
சென்னை: 23 குழந்தைகளை தத்தெடுத்துள்ள நடிகை ஹன்சிகா 24வது ஆக ஒரு சிறுவனை தத்தெடுத்து அவரின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஹன்சிகாவுக்கு தோல் மட்டும் வெள்ளை அல்ல மனசும் தான். அவர் நடிப்பை தவிர சமூக சேவையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தன்னுடைய பிறந்தநாள் அன்று தவறாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்துவிடுகிறார்.
இந்நிலையில் அவர் மேலும் ஒரு சிறுவனை தத்தெடுத்துள்ளார்.

24வது
ஹன்சிகா இதுவரை 23 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் புனேவைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவனை தத்தெடுத்து அவனின் கல்விச் செலவை தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிறுவன் கதை
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாலமந்திர் பள்ளியில் படிக்கும் அந்த சிறுவனின் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அவனை அவனது அப்பாவின் தங்கை எடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதால் அவர் சிறுவனை படிக்க வைத்த திணறினார். இந்நிலையில் தான் ஹன்சிகா சிறுவனை தத்தெடுத்து உள்ளார்.

மார்பக புற்றுநோய்
ஹன்சிகா புற்றுநோயால் அவதிப்படும் 10 பெண்களின் மருத்துவச் செலவிற்கும் உதவி செய்து வருகிறார். இது தவிர மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் ஹன்சி.

ஹன்சிகா
சிறுவனை தத்தெடுத்ததை பற்றி ஹன்சிகா கூறுகையில், குழந்தைகளை தத்தெடுப்பது, அவர்களை படிக்க வைப்பது ஒரு சமூகத்தையே மாற்றும். இது ஒருவரின் கடமை ஆகும். இவ்வாறு நான் செய்வதால் மனநிறைவு ஏற்படுகிறது. நீங்களும் என்னை போன்று செய்து பாருங்களேன் என்றார்.

குழந்தை
ஹன்சிகாவையே பலர் குழந்தை போன்று இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் பல குழந்தைகளை தத்தெடுத்து புது வாழ்வு அளித்து வருவது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் ஹன்சி.


Click it and Unblock the Notifications











