எனக்குப் பிறகு ஹன்சிகாவுக்குத்தான் அந்த இடம்! - சிம்ரன்

கவர்ச்சி, பெல்லி டான்ஸ் மட்டுமல்ல, கிசுகிசுக்களிலும் முதலிடத்தில் இருந்தவர் சிம்ரன்.
திருமணத்துக்குப் பிறகு மீண்டும் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சமமான நாயகி என தமிழில் யாரையும் கூற முடியவில்லை.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கு சமமான நாயகி என அவர் ஹன்சிகாவைப் பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "தமிழில் என்னுடைய இடத்தைப் பிடித்திருப்பவர் ஹன்சிகாதான். அவருடைய அழகும், துறுதுறு நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்குப் பிடித்த வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தற்போது 'அரிஜெம் மூவிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். முதன் முதலாக 'டான்ஸ் தமிழா டான்ஸ்' என்ற நடன நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனலில் தொடங்கியுள்ளேன்.
சிறுவயதில் இருந்தே டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ஆடுவதைவிட, பிறரை ஆடவைத்துப் பார்ப்பது பிடிக்கும் என்பதால் புதிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்," என்றார்.
விரைவில் சினிமாவும் தயாரிக்கப் போகிறார் சிம்ரன்.


Click it and Unblock the Notifications











