»   »  ஹன்சிகாவுக்கு ஜப்பான்ல ரசிகர்மன்றம் ஆரம்பிச்சிருவாங்களோ?

ஹன்சிகாவுக்கு ஜப்பான்ல ரசிகர்மன்றம் ஆரம்பிச்சிருவாங்களோ?

Subscribe to Oneindia Tamil

நீங்க பாக்குறதுக்கு சின்னத்தம்பியில வர்ற குஷ்பு மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்க... இது ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகாவைப் பார்த்து உதயநிதி ஸ்டாலின் கூறும் டயலாக்.

இதேபோன்று வெட்கப்பட வைக்கும் டயலாக் சொல்லி ஹன்சிகாவை அசத்தியிருக்கிறார் ஜப்பானில் உள்ள டோயோமா மாநில கவர்னர். ஒரு மாநில கவர்னரே தன்னுடைய அழகைப் புகழ்ந்து விட்டதால் தன்னுடைய படங்களை இங்கே ரிலீஸ் செய்யலாமா என்று யோசித்து வருகின்றனர்.

அழகான நடிகைகள் என்றால் உடனே ரசிகர்மன்றம் ஆரம்பித்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் அளவிற்கு போய்விடுவார்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள். இப்போது ஹன்சிகாவிற்கும் கோவில் கட்டும் அளவிற்கு கொண்டாடி வருகின்றனர்.

கிராமத்து ரசிகர்கள்

கிராமத்து ரசிகர்கள்

எந்த ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ முதலில் ரசிகர்மன்றம் ஆரம்பிப்பது மதுரை மக்கள்தான். அதேபோல் மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனவுக்கன்னி ஹன்சிகா ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர்கள் நேரடியாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடிக்கின்றனராம்.

அழகு கட்டிப்போடுதே…

அழகு கட்டிப்போடுதே…

ஹன்சிகாவை பார்க்க வரும் ரசிகர்கள் யாரும் உடனே திரும்பிப் போய்விடுவதில்லையாம். உங்க அழகு எங்களைப் போகவிடாமல் கட்டிப் போடுதே என்று டயலாக் விடுகின்றனராம். எனவேதான் கிராமத்து ரசிகர்கள் வந்தாலே கேரவனுக்குள் ஓடிச்சென்று பதுங்கிக்கொள்கிறாராம் ஹன்சிகா.

ஜப்பானில் புது ரசிகர்கள்

ஜப்பானில் புது ரசிகர்கள்

தமிழ்நாட்டில்தான் இப்படி என்றால் சமீபத்தில் "தீயா வேலை செய்யனும் குமாரு" படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றபோது அங்கும் அழகை வர்ணிக்க ரசிகர் வந்துவிட்டாராம். அவர் ஜப்பான் நாட்டில் டோயோமா மாநிலத்தைச் சேர்ந்த கவர்னராம்.

அசந்து போன ஹன்சிகா

அசந்து போன ஹன்சிகா

நான் பார்த்த நடிகைகளில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று ஜப்பான் மொழியில் கூறவே அதை ஒருவர் ஆங்கிலத்தில் ஹன்சிகாவிடம் மொழிபெயர்த்தபோது, வெட்கத்தில் பூரித்தாராம் ஹன்சிகா. உடனே இயக்குநர் சுந்தர்.சி கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டாராம்.

ஜப்பானில் ரசிகர் மன்றம்

ஜப்பானில் ரசிகர் மன்றம்

ரஜினி, மீனாவிற்கு ஜப்பானில் ரசிகர்கள் அதிகம் இருப்பதைப் போல இனி ஹன்சிகாவிற்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Hansika was touched to discover that she had fans in Japan too, said, “A Japanese woman came running up to me, showing me all the DVDs of my movies that she had. I was speechless. And the best part was that the Governor of Toyama visited us on the sets. And Sundar sir would tease me, saying, ‘Whenever you come for the shot, even if he (the Governor) was going away, he would rush back to see you!’

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more