தத்தெடுத்த குழந்தைகளுக்காக சிறுவர் இல்லம் கட்டும் ஹன்சிகா
சென்னை: ஹன்சிகா தான் தத்தெடுத்துள்ள குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தை கட்டவிருக்கிறார்.
நடிகை ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார். இது தவிர ஆதரவற்று நிற்கும் குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொள்கிறார்.
இப்படி அவர் இதுவரை மொத்தம் 24 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவை கவனித்து வருகிறார்.

இல்லம்
தான் தத்தெடுத்துள்ள குழந்தைகளுக்காக மும்பையில் ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்று ஹன்சிகா ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேறும் காலம் தூரத்தில் இல்லை.

துர்கா
ஹன்சிகா நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஜோடியாக தெலுங்கில் துர்கா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை ஹன்சிகா தொடப்போவதில்லை.

நல்ல காரியம்
துர்கா படத்தின் சம்பளத்தை வைத்து மும்பையில் ஒரு இடம் வாங்கிப் போட்டு அதில் தான் தத்தெடுத்துள்ள குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தை கட்டவிருக்கிறார் ஹன்சிகா.

டயட்
ஹன்சிகா இளம்நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதனால் உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டில் உள்ளார். தான் நடிக்கும் ஹீரோக்கள் ஒல்லியாக இருந்து தான் மட்டும் குண்டாக இருக்கக் கூடாது என்று அவர் நினைக்கிறார்.


Click it and Unblock the Notifications











