தோழிகளுடன் அமெரிக்காவில் ஓய்வெடுக்கும் ஹன்சிகா
நியூயார்க்: நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தோழிகளுடன் அமெரிக்காவிற்குச் சுற்றுலாச் சென்றுள்ளாராம்.
எதனுஷுடன் 'மாப்பிள்ளை' படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. நடிகை குஷ்புவின் சாயலில் க்யூட்டாக இருந்ததால், ரசிகர்களால் 'குட்டி குஷ்பு' எனச் செல்லமாக அழைக்கப் படுகிறார்.
ஹன்சிகா தற்போது தனது விடுமுறையைக் கழிக்க தோழிகளுடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். இந்தியா திரும்ப இன்னும் இரண்டு வார காலம் ஆகுமாம்.

பட வேலைகள்...
ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘பிரியாணி' படம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இது தவிர தமிழில் அரண்மனை, வாலு, வேட்டைமன்னன், இந்தி படமான கோல்மால்-3 ரீமேமக்கின் மான் கராத்தே ஆகிய படங்களில் நடித்து வந்தார் ஹன்சிகா.

அமெரிக்கப் பயணம்....
இந்நிலையில், தனது பிசியான படப்பிடிப்பு வேலைகளுக்கிடையே தனது தோழிகளுடன் விடுமுறையைக் கழிக்க அமெரிக்கா சென்று உள்ளாராம் ஹன்சிகா.

லாஸ் ஏஞ்சல்ஸ்...
ஹன்சிகா தற்போது நியூயார்க்கில் உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தை பருவத்து தோழிகள்...
தற்போது ஹன்சிகாவுடன் அமெரிக்கா சென்றுள்ள தோழிகள் அவரது குழந்தைப் பருவத்து தோழிகள் எனச் சொல்லப் படுகிறது. வருடதோறும் இது போன்று அவர்கள் வெளியூருக்கு சுற்றுலா செல்வது வழக்கமானது தானாம்.

தெலுங்குப்படம்....
அமெரிக்காவில் ஹோலிவுட் பகுதிகளை சுற்றி பார்த்தப் பின்னர், 2 வாரங்களில் ஹன்சிகா இந்தியா திரும்ப உள்ளாராம். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.


Click it and Unblock the Notifications











