என்னை எல்லாம் அவ்வளவு ஈஸியாக யாராலும் வீழ்த்திவிட முடியாது: ஹன்சிகா
சென்னை: தன்னை யாராலும் வீழ்த்திவிட முடியாது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரை உலகில் வெற்றி நாயகியாக இருந்தாலும் சமந்தாவுக்கு கோலிவுட்டில் இதுவரை எந்த படமும் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் ஜோடி சேர்ந்தார்.
மேலும் விஜய், விக்ரமுடமுடனும் சேர்ந்து நடிக்கிறார்.

அஞ்சான்
அஞ்சான் படத்தில் சமந்தா படுகவர்ச்சியாக நடித்துள்ளார். மேலும் டோலிவுட்டை போன்றே கோலிவுட்டிலும் நம்பர் ஒன் நடிகையாக முடிவு செய்துள்ளாராம் சமந்தா.

நயன், ஹன்சிகா
சமந்தாவின் இந்த முடிவால் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டது.

ஹன்சிகா
எனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. என் மார்க்கெட் வலுவாக உள்ளது. அதனால் என்னை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடியாது என்று நம்பிக்கையோடு பேசுகிறார் ஹன்சிகா.

நான் எல்லாம்
என் உடல் வாகுக்கு நான் எல்லாம் ஓரளவுக்கு மாடர்னாக உடை அணிந்தாலே போதும் நான் கிளாமராக இருப்பேன் என்கிறார் ஹன்சிகா.

கவர்ச்சி
சமந்தாவின் கவர்ச்சியால் எனக்கு பயம் இல்லை. போட்டி என்று வந்தால் கவர்ச்சியிலும் கிறங்கடிப்பேன். நான் தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அதே நேரம் கவர்ச்சியாகவும் நடிக்கிறேன் என்று கூறினார் ஹன்சி.

ரசிகர்கள்
என்ன தான் பல நடிகைகள் இருந்தாலும் புஸு புஸுன்னு இருக்கும் ஹன்சிகாவுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











