அபூர்வ சக்திகளுடன் ‘தெய்வக் குழந்தையாக’ நடிக்கும் ஹன்சிகா
சென்னை: தற்போது நடித்து வரும் அரண்மனைப் படத்தில் அற்புத சக்திகள் கொண்ட தெய்வக் குழந்தையாக நடிக்கிறாராம் ஹன்சிகா.
தீயா வேலை செய்யணும் குமாரு பட வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கி நடிக்கும் படம் அரண்மனை. இப்படத்தின் இன்னொரு நாயகனாக வினய் நடிக்கிறார். ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் உள்ளனர்.
முக்கிய வேடத்தில் சந்தானம், நிதின் சத்யாவும் நடிக்கிறார்கள். வில்லன்களாக பருத்திவீரன் சரவணன், ராஜ்கபூர், விச்சு நடிக்க பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார்.

சவாலான கேரக்டர்....
த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஹன்ஷிகாவுக்கு சந்திரமுகி ஜோதிகா போன்ற சவாலான வேடமாம். அதனால், தன்னுடைய கேரக்டரில் கூடுதல் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறாராம் ஹன்சிகா.

அபூர்வ சக்தி...
கதைப்படி, நோய்களைக் குணமாக்கும் மற்றும் எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே உணர்வது மாதிரியான அபூர்வ சக்திகள் கொண்ட பெண் கதாபாத்திரமாம் ஹன்சிகாவிற்கு.

குடும்ப குத்துவிளக்கு....
சமீபத்திய படங்களில் நவநாகரீக பெண்ணாக கவர்ச்சி விருந்தளித்து வந்த ஹன்சிகா, இப்படத்தில் தாவணி கட்டிக்கொண்டு, நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்துக்கொண்டு படுவித்தியாசமான ஹன்சிகாவாக மாறியுள்ளாராம்.

மிரட்டல் நடிப்பு...
இவரது கதாபாத்திரம் தான் படத்தின் திருப்புமுனையாக அமையுமாம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

த்ரில்லர் படம்...
இப்படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாகத் தான் ஹன்சிகா நடிக்கிறார் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், லட்சுமிராய் தான் சுந்தர்.சியின் ஜோடியாம். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்கி வருகிறாராம் சுந்தர்.சி.


Click it and Unblock the Notifications











