தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஹன்சிகாதான்: சிம்ரன் புகழாரம்

சென்னை: தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வந்த சிம்ரன் 'இன்றைய தேதியில் திறமையும், அழகும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகை ஹன்சிகா தான்' என தெரிவித்துள்ளார்.

விஜயுடன் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் அறிமுகமான நடிகையான சிம்ரன், தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர். திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்ற சிமரன் தொழிலதிபர் ஒருவரை மணந்த பின், சிறிது காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்தார்.

மீண்டும், சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தோன்றி வருகிறார். அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நேர்காணலில் ஹன்சிகாவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது :-

படத்தயாரிப்பு...

படத்தயாரிப்பு...

சில படத்தயாரிப்பு நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். விரைவில், என் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பட அறிவிப்பு வெளிவரலாம்.

ஹன்சிகா...

ஹன்சிகா...

இன்றைய சூழலில் தமிழின் நம்பிக்கை நட்சத்திரமாக ஹன்சிகாவைச் சொல்லலாம். நல்ல கிளாமராக, பார்க்கவும் அழகாக இருக்கிறார். நன்றாக டான்ஸும் ஆடுகிறார்.

தாய்மை....

தாய்மை....

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது வரப்பிரசாதம். என் இரண்டு மகன்கள் தான் எனது பலமே. அவர்களுடன் நேரத்தை செலவிடுவதுஎனக்கு மிகவும் பிடித்த விஷயம். ( சிம்ரனின் மூத்த மகன் அதீப்புக்கு எட்டரை வயது, இளையவன் ஆதித்க்கு இரண்டரை வயது )

வொர்க்கஹாலிக்...

வொர்க்கஹாலிக்...

நான் ஒரு வொர்க்கஹாலிக்... எனது வேலைகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். எனது சொந்த வாழ்க்கையாகட்டும், தொழிலாகட்டும் அதில் என் முழு ஈடுபாடு இருக்கும்.

நடனம் என்பது...

நடனம் என்பது...

என்னைப் பொருத்த வரை நடனம் என்பது வெறும் பாவனைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. என்னை இந்த உலகத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் ஒரு காரணியாகவே நடனத்தை நான் பாவிக்கிறேன். இதயத்திலிருந்து வெளிவரும் நடனம் மட்டுமே உண்மையானது' எனத் தெரிவித்துள்ளார் சிம்ரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X