நிற்க நேரமில்லாத அளவுக்கு பிஸியா நடிக்கணும்! - ஹன்சிகா

By Shankar

சென்னை: நிற்க நேரமில்லாத அளவுக்கு பிஸியாக நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.. இதுதான் என் ஆசை, என்கிறார் ஹன்சிகா.

ஹன்சிகா தமிழில் 'வாலு', 'அரண்மனை', 'மான் கராத்தே', 'உயிரே உயிரே', 'மீகாமன்', 'வேட்டை மன்னன்' ஆகிய ஆறு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

தெலுங்கிலும் நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். சிம்புவுடனான காதல் முறிவை அறிவித்த ஹன்சி, இப்போது மேலும் மேலும் புதுப்பட வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு வருகிறார்.

ஓய்வில்லா பயணங்கள்...

ஓய்வில்லா பயணங்கள்...

தனது இப்போதைய வாழ்க்கை குறித்து ஹன்சிகா கூறுகையில், "சூட்கேசும் கையுமாகச் சுற்றுவதே என் இப்போதைய வாழ்க்கையாகி விட்டது. ஆடைகளை சூட்கேசுக்குள் அடைப்பதும், படப்பிடிப்புக்காக வெளியூருக்கு பயணம் மேற்கொள்வதும், பிறகு வீட்டுக்கு திரும்புவதும் மீண்டும் சூட்கேசில் துணிகளை அடுக்கி வேறு படப்பிடிப்புக்காக புறப்படுவதுமாக என நாட்கள் போய்க்கொண்டுள்ளன.

பத்துப் படங்கள்

பத்துப் படங்கள்

தமிழ், தெலுங்கில் பத்து படங்களில் நடிக்கிறேன். ஓய்வெடுக்க நேரமே கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரம் இந்த வாழ்க்கை எனக்கு போரடிக்கவும் இல்லை. இதுவே தொடரணும்னு விரும்பறேன்.

பிரார்த்தனை பலித்தது

பிரார்த்தனை பலித்தது

சில வருடங்களுக்கு முன்பு ஓரிரு படங்களில்தான் நடித்தேன். அப்போது ஓய்வே இல்லாத அளவுக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும். பிசியான நடிகையாக வலம் வரவேண்டும் என்று கடவுளை வேண்டினேன். என் பிரார்த்தனை பலித்து விட்டது.

22 வயசுதான் ஆகுது

22 வயசுதான் ஆகுது

ஓய்வே இல்லாத அளவுக்கு படங்கள் குவிந்து விட்டன. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. எதிர்காலம் நல்ல விதமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் தோழிகள் இப்போதுதான் டிகிரி படிப்பை முடித்துள்ளனர். அவர்கள் செட்டில் ஆவதற்கு இன்னும் பத்து வருடங்கள் ஆகும். எனவே நானும் அதுவரை நிறைய படங்களில் நடிக்கலாம்.

எனக்குப் போட்டியே இல்லை

எனக்குப் போட்டியே இல்லை

தமிழ், தெலுங்கு திரையுலகில் எனக்கு எந்த நடிகையும் போட்டி இல்லை. எனக்கு நானேதான் போட்டி. முந்தைய படத்தில் நடித்ததைவிட அடுத்த படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருக்கிறது. சக நடிகைகள் நன்றாக நடித்து இருந்தால் அவர்களை போனில் பாராட்டி விடுகிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X