குஷ்பு இடத்தை பிடிக்க ஆசை: ஹன்சிகா
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடிக்கிறேன் என்ற பெயரில் தலையைக் காட்டிச் சென்ற ஹன்சிகா மோத்வானி. அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் பிகக்ப்பாகி விட்டார். இளைய தளபதி விஜயுடன் நடித்த வேலாயுதம படத்தில் ஹன்சிகா நடிப்பில் சற்றே தேறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். தற்போது அவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்த ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ்ப் புத்தாண்டிற்கு ரிலீஸாகிறது.
இதையடுத்து அவர் சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். அம்மணி தெலுங்கிலும் பிசியாக உள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உங்கள் வசனங்கள் இரட்டை அர்த்தம் உள்ளதாகவே இருக்கிறதாமே என்று கேட்டதற்கு, அவர் கூறுகையில்,
ச்சே, ச்சே அப்படியெல்லாம் கிடையாது. இதில் ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் கிடையாது. இயக்குனர் ராஜேஷ் சொல்லிக் கொடுத்தப்படி அப்படியே பேசியுள்ளேன். இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.
நான் பார்ப்பதற்கு குஷ்பு போன்று இருக்கிறேன் என்று பலரும் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு குஷ்பு இடத்தை பிடிக்க ஆசையாக உள்ளது. நிச்சயம் அவர் இடத்தை பிடிப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications












