நான் காதலிக்கிறேன்...என் வேலையை மட்டுமே: ஹன்சிகா
சென்னை: நான் என் வேலையை தான் தற்போது காதலிக்கிறேன் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
ஹன்சிகா சிம்புவை காதலிப்பதாக அறிவித்தார். ஆனால் அவர்களின் காதல் மலர்ந்த வேகத்தில் கருகிவிட்டது. காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதால் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் முன்னணி தமிழ் பத்திரிக்கை ஒன்றில் ஹன்சிகா தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக செய்து வெளியானது. இதை பார்த்த ஹன்சிகா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் மீண்டும் காதலிப்பதாக முன்னணி தமிழ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை பார்த்தேன். நிஜமாகவா??? நான் காதலிக்கிறேனா???ஹாஹா! நல்ல பொய்யான தலைப்பு. தற்போது நான் என் வேலையை மட்டுமே காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











