ஹன்சிகாவை நெருக்கித் தள்ளி, கையைப் பிடித்திழுத்த ரசிகர்கள்!
ரசிகர்கள் நெருக்கித் தள்ளி, கையைப் பிடித்து இழுத்ததால் நடிகை ஹன்சிகா பெரும் சிரமத்துக்குள்ளானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் ஹன்சிகா.
வாலு, அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், ரோமியோ ஜூலியட், வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார்.

படம் பார்க்க..
படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ள அவர் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இருக்கும் எஸ்கேப் மல்டிப்ளெக்ஸில் படம் பார்க்க சென்றார்.

தனியாக
பாதுகாப்புக்கென யாரையும் அழைத்து வராமல் தனியாகவே வந்திருந்தார் ஹன்சிகா. சென்னையில் இருக்கும்போதெல்லாம் இதுபோல அடிக்கடி செல்வது அவர் வழக்கம்.

ரசிகர்கள்
தியேட்டரை நோக்கி நடந்த சென்று கொண்டிருந்த அவரை அங்கு கூடி நின்ற ரசிகர்கள் பார்த்துவிட்டனர். உடனே ஓடிப் போய் அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
சிலர் அவர் கையெழுத்து கேட்டார்கள். இன்னும் சிலர் சேர்ந்து நின்று கைபேசியில் படம் எடுத்துக் கொண்டனர்.

இம்சை
ஒரு கட்டத்துக்கு மேல், ஹன்சிகா வெளியேற முயன்றபோது, அவரை நெருக்கி, நிறுத்திவிட்டனர் ரசிகர்கள்.
அவர் கைகளைப் பிடித்து இழுத்தும், தொட்டுத் தடவியும் இம்சை பண்ண ஆரம்பித்துவிட்டனர்.
இதைப் பார்த்த திரையரங்கு ஊழியர்கள் வந்து ஹன்சிகாவை மீட்டுச் சென்றனர்.

மாட்டிக்கொண்டேன்
இது குறித்து ஹன்சிகா கூறுகையில், "தனியாக படம் பார்க்க வந்ததால் ரசிகர்களிடம் நான் மாட்டிக் கொண்டேன். கிட்டத்தட்ட ரசிகர்கள் முற்றுகையிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

வருத்தமில்லை
தமிழில் பேசி அவர்களைச் சமாளித்தேன். ஆனால் இதற்காக நான் வருத்தமோ அதிர்ச்சியோ அடையவில்லை. ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை அவர்களுக்குத் தெரிந்த விதத்தில் காட்டுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











