Hansika Motwani Divorce: ஹன்சிகா மோத்வானி விவாகரத்து.. ஜீவனாம்சம் விவரம் தெரியுமா?
மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் கடந்த 2025ஆம் ஆண்டே விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இப்படி இருக்கையில் இவர்கள் இருவருக்கும் மும்பை குடும்ப நல நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஹன்சிகாவுக்கும் சோஹேலுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரமாண்டமாகத் திருமணம் நடந்தது. அவர்களின் திருமண நிகழ்வுகள் ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா என்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இப்படி இருக்கையில் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர், தொழிலதிபர் சோஹேல் கதுரியா ஆகியோர் தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றத்தில் இந்த தம்பதியினருக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. நடிகை ஹன்சிகா மோத்வானி தானாகவே நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து மனுவை தாக்கல் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விவகாரத்தில் அவர் எந்தவித அலிமனி (பராமரிப்பு தொகை) அல்லது சொத்து கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Hansika Motwani மற்றும் Sohael Khaturiya இருவரும் 2022 டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்பூர் நகரில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் இந்த உறவை காப்பாற்ற முயன்றாலும் அது சாத்தியமாகவில்லை. இதையடுத்து இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும், இந்த தம்பதியினர் 2024 ஜூலை மாதம் முதல் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











