Hansika Motwani Birthday - பர்த்டே பேபி ஹன்சிகா மோத்வானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: Hansika Motwani Birthday (ஹன்சிகா மோத்வானி பிறந்தநாள்) நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மும்பையில் பிறந்தவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்த அவர் தென் இந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி தெலுங்கில் அவர் தேசமுதுரு, காந்த்ரி, மஸ்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் நடித்தார். அங்கு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு கிடைத்தது. இந்தச் சூழலில் தமிழில் அவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.

படம் ஃப்ளாப்தான் ஆனாலும்: தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் ஹன்சிகா மோத்வான்யின் அழகு தமிழ் ரசிகர்களையும், திரையுலகினரையும் கவர்ந்துவிட்டன. அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அதன்படி அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
விஜய்யுடன் ஜோடி: எங்கேயும் காதல் படத்துக்கு பிறகு ஹன்சிகா மோத்வானிக்கு அடித்தது ஜாக்பாட். ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவான வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடித்தார். குறிப்பாக சில்லாக்ஸ் பாடலில் அவர் போட்ட நடனத்தை கண்டு ரசிகர்கள் சொக்கி போயினர். அதன் பிறகு உச்சம் சென்றார் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்தார்.
சிம்புவுடன் காதல்: வாலு படத்தில் நடித்தபோது சிம்புவை காதல் செய்ய ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் நிச்சயம் அஜித் - ஷாலினி போல் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும் அறிவித்தனர். ஆனால் சில காலத்திலேயே அவர்களது காதல் பிரேக் அப்பில் முடிந்தது. காதல் முறிந்தாலும் தொடர்ந்து மனிதன், போகன், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களிலும்; சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

திருமணம்: பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் அவர் கடைசியாக மகா படத்தில் நடித்தார். தொடர்ந்து மை நேம் இஸ் ஸ்ருதி, ரௌடி பேபி உள்ளிட்ட படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது.
பிறந்தநாள்: இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு 45 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருக்கிறதாம்.
சினிமாவில் சம்பாதித்ததை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் அவர் முதலீடும் செய்திருக்கிறாராம். கடந்த வருடம் அவரது சொத்து மதிப்பு 40 கோடியாக இருந்ததாகவும் ஒரே வருடத்தில் 5 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











