Don't Miss!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- News
மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகிறது.. எங்கெல்லாம் தெரியுமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லவ் செட் ஆகாததால் வீட்ல பார்த்த பையனுக்கு ஓகே சொன்ன ஹன்சிகா? பிரபல அரசியல்வாதி மகனுடன் திருமணம்?
சென்னை : நடிகை ஹன்சிகா தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் நடித்துள்ளார்.
இவரது 50வது படமாக சமீபத்தில் மஹா படம் வெளியானது. இந்தப் படத்தில் சிம்புவுடன் இவர் ஜோடி சேர்ந்திருந்தார்.
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. தொடர்ந்து சில படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார்.
பிரிதிவிராஜின்
'கடுவா’
மூவி
ரிவ்யூ..தனிமனிதனை
சீண்டினால்
விளைவு
என்னாகும்?-புலியின்
பாய்ச்சல்

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். சக்கலக்க பூம்பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர், தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தேசமுதுருவில் அறிமுகமானார்.

தென்னிந்திய மொழிகளில் நடிப்பு
தொடர்ந்து இந்தி, கன்னட மொழிகளில் நடித்துவந்த இவர், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் தெலுங்கில் நடித்துவந்தார். இந்நிலையில் மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

விஜய்யுடன் ஜோடி
விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தார். அப்போதுதான் சிம்புவுடன் இவருக்கு காதல் என்று கூறப்பட்டது. தொடர்ந்து இந்தக் காதல் முறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

50வது படம் மஹா
இதனிடையே தன்னுடைய 50வது படமான மஹாவில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார் ஹன்சிகா. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஹன்சிகாவின் நடிப்பு பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ஹன்சிகாவிற்கு திருமணம்
இதனிடையே பட வாய்ப்புகள் குறைந்ததால் அவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல அரசியல்வாதியின் மகனை ஹன்சிகா திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து ஹன்சிகா மௌனம் சாதித்து வருகிறார்.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
இந்த திருமணம் வீட்டில் உள்ள பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தத்திற்கான தேதி ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகாவின் அண்ணனின் திருமணம் நடைபெற்றது. அதன் வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ஹன்சிகா.